கற்பழித்த பாதிரியருக்கு ஆதரவாக களம் காணும் திருச்சபைகள்

கற்பழித்த பாதிரியருக்கு ஆதரவாக களம் காணும் திருச்சபைகள்

       கேரளாவில் 2018 செப்டம்பர் மாதம் ஜலந்தர் பிஷப் பிரங்கோ முலக்கல்,  கன்னிகாஸ்திரியை கற்பழித்த சம்பவத்தில் சாட்சியம் கூறிய நான்கு கன்னியஸ்திரிகளை, குருவிளங்கோடு கான்வென்டிலிருந்து வெளியேற்றி, நாட்டின் வேறு வேறு பகுதியில் உள்ள கான்வென்டிற்கு மாற்றல் செய்யப்பட்டார்கள்.  இம் மாற்றத்தை சம்பந்தப்பட்ட கன்னியஸ்திரிகள் ஏற்றுக் கொள்ளாமல், நீதி  கிடைக்க மேல் பொறுப்பாளர்களிடம் புகார் கொடுக்க முனைந்துள்ளார்கள்.   இது பற்றி 16.1.2019ந் தேதி ஆங்கில நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது.  இது பற்றி பாதிக்கப்பட்ட கன்னியஸ்திரி அனுபாமா,  பாதிரியர் முலக்கல் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வழக்கை நீர்த்து போக செய்யவே இந்த மாற்றமாகும்.  இதன் காரணமாக எங்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.    பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிஷப்பிற்கு ஆதரவாக சில கன்னியஸ்திரிகளும் உள்ளது வேதனைக்குறியது.  பிஷப்பிற்கு ஆதரவாக இருக்கும் மதர் சுப்பிரீயர் சிஸ்டர் ரெய்ன என்பவர் , ஆர்பாட்டம் நடத்தியவர்களிடம், மிஷினரியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதை கூறி,  வேறு இட மாற்றலுக்கு உடன்பட்டு, வழக்கு சம்பந்தமாக எந்த சாட்சியமும் கூற வேண்டாம் என்ற அன்பான கட்டளையும் பிறபித்துள்ளார்.  

       இது பற்றிய முழுமையான விசாரணை நடத்தினால், பல்வேறு முறைகேடுகள் அரங்கத்திற்கு வருகின்றன.  இயேசுவின் மிஷனரிகள் (  Missionaries of Jesus )  தொடர்ச்சியாக பாலியல் குற்றத்திற்கு ஆளான பிஷப் பிரங்கோ மூலக்கலுக்கு ஆதரவாகவே காரியங்களை செய்கிறார்கள்.   ஜலந்தா் சர்சில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதால், பணத்தை கொண்டு, ஏழ்மையில் உள்ள கன்னியஸ்திரிகளை தங்களின் விருப்பத்தற்கு ஏற்ப துன்புறுத்துகிறார்கள்.   பாதிக்கப்பட்ட கன்னியஸ்திரியை பாதுகாக்க வேண்டிய சர்சுகள், அவருக்கு துன்பத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக பல கன்னியஸ்திரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.  ஜலந்தர் மறைமாவட்ட ஆயர், காவல் துறையினரின் உதவியுடன், பாதிக்கப்பட்ட கன்னியஸ்திரியை வேறு இடத்துக்கும், சாட்சியம் கூறிய நான்கு கன்னியஸ்திரிகளையும் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களுக்கும் மாற்றல் செய்ய ஆலோசனை வழங்கியுள்ளார்.   மதர் சுப்பிரீயர் சிஸ்டர் ரெய்ன  பாதிக்கப்பட்டவருக்கும், சாட்சியம் அளித்தவருக்கும் பாதுகாப்பு கொடுக்க இயலாது என்ற காரணத்திற்காக மாற்றப்பட்டதாக கூறினாலும், உண்மை கிடையாது என பலர் கூறுவதாக ஒரு பத்திரிக்கையில் 23.11.2018 ந் தேதி செய்தி வெளியாகியுள்ளது.   

       இந்த விவகாரத்தில் கேரள அரசாங்கத்தின் தலையீடும் உள்ளது.  27.10.2018ந் தேதி குருவிளங்கோடு சப் இன்ஸ்பெக்டர், சிஸ்டர் ரெய்னாவிற்கு எழுதிய கடிதத்தில் தங்களது கான்வென்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கேட்டு  விலாவாரியாக கடிதம் எழுதியுள்ளார்.   கன்னியஸ்திரியை கற்பழித்த வழக்கின் முக்கிய சாட்சியமான  பாதர் குரியகோஸ் மர்மமான முறையில் மரணமடைந்தது பற்றியும் எழுதியுள்ளார்.   இதன் காரணமாக சிஸ்டர் ரெய்னா, அரசாங்க பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதும்,  எழுதிய கடிதத்தை ஆதரமாக கொண்டு, குருவிளங்கோடு பாதிக்கப்பட்ட கன்னியஸ்திரியையும், சாட்சியம் கூறியவர்களையும் அரசாங்க பாதுகாப்பில் வைத்திருக்க ஆலோசனை வழங்கப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக கூறியது, நாங்கள் அரசு ஊழியர்கள் அல்ல, இயேசுவிற்கு பணியாற்ற வந்தவர்கள் என கூறி பாதுகாப்பிற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனுபாமா என்பவர்  கான்வென்டில் உள்ள ஒரு பெண் தான் இம் மாதிரியான ஏற்பாடுகளுக்கு முயற்சிக்கிறார் என்றும் கூறியவர், புதிதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.  திருச்சூர் மறைமாவட்ட ஏற்பாட்டில் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில் மார்ச்சு மாதம் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிராங்கோ மூலக்கலின் பிறந்த நாள் தேதியில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  இதுவே கேரள மறைமாவட்ட ஆயர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆர்வம் கிடையாது என்பதை காட்டுகிறது என்றார்.

       தமிழகத்தில் உள்ள ஊடகங்களும், டி.வி. சேனல்களும் ஏன் இது பற்றிய விவாதம் நடத்த முன் வரவில்லை என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.  இந்துக்கள் என்றால் போட்டி போட்டுக் கொண்டு அசிங்கமாக விவாதம் செய்வதும்,  அது பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை வரைவதும் வாடிக்கை.  இந்த விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்படும் என கேரள அரசாங்கம் அறிவித்தாலும், சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகத்திற்கு காரணம், சட்ட மன்ற உறுப்பினர் பி.சி.ஜார்ஜ் என்பவர் சம்பவம் நடந்தவுடன், பாதிக்கப்பட்ட கன்னியஸ்திரியை ஒரு விபச்சாரி என குறிப்பிட்டார். இன்னும் ஒரு படி மேலே போய், மேற்படி பிஷப் 13 முறை தவறாக நடந்தார் என்றால், 12 முறை நடந்த போது, குற்றம் சுமத்தாமல், 13வது முறை குற்றம் சுமத்துவது ஏன் என்ற கேள்வியை எழுப்பி பெண் இனத்துக்கு அவமானம் உருவாகும் விதமாக பேசியதை எவரும் கண்டு கொள்ளவில்லை. சர்ச், கேரள, அரசாங்கம், காவல்துறையினர், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.   ஆனால் பிரங்கோ மூலக்கல் விவகாரத்தை கண்டு கொள்ளாமல் இருக்க என்ன நடந்தது என்றே  தெரியவில்லை. 

-    ஈரோடு சரவணன்