கலக்கும் இந்திய அணி ; களை கட்டிய சிட்னி

கலக்கும் இந்திய அணி ; களை கட்டிய சிட்னி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்தியா தனது நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்து ஆடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து விட்டது. நேற்று ஆட்ட நேர முடிவில் 130  ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று தொடர்ந்து ஆடிய அவர் 193 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்தார். இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆஸ்திரேலிய மண்ணில் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

ஆஸ்திரேலியா சற்று முன் வரை 24 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் ஆடிவருகிறது.