கவனக்குறைவால் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி - மாநில அரசு நடவடிக்கை

கவனக்குறைவால் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி - மாநில அரசு நடவடிக்கை

சாத்தூரை சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி நோய் தொற்று உள்ள ரத்தம்  கவனக்குறைவாக செலுத்தப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சம்பந்தப்பட்ட இரத்த பரிசோதனை ஆய்வாளர்கள் மூவரையும் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அவர் விரும்பும் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும், குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஒரு துரதிருஷ்டவசமானது எனவும், தமிழகத்தில் எல்லா ரத்த மாற்றுக்கு பயன்படும் எல்லா ரத்த பகுப்புகளும் பாதுகாப்பானவை தான் என்றும் மக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.