காங்கிரஸின் தவறுகளை சரி செய்வதே எனது குறிக்கோள் - பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸின் தவறுகளை சரி செய்வதே எனது குறிக்கோள் - பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சரி செய்வதே தனது எனது குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு காங்கிரஸ் தான் காரணம்." என்று கூறினார்.  மேலும், விவசாயிகள் சூரிய சக்தி மின்சாரம், சொட்டு நீர் பாசனம் முதலிய நவீன உத்திகளை பயன்படுத்தி சக்தி வழங்குபவர்களாக மாற வேண்டும் என்றும் கூறினார். 

கர்தார்பூர் வழிதடம் அமைக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட பிரதமர், சீக்கியர்களின் புனித தலம் பாகிஸ்தானில் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம். கர்தார்பூர் வழிதடம் அமைப்பது குறித்து  70 வருடங்களாக  காங்கிரஸ் ஏன் சிந்திக்கவில்லை.?காங்கிரஸின் தொலை நோக்கு சிந்தனையின்மை தான் இதற்கு காரணம். இதற்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்போது அமையவிருக்கும், கர்தார்பூர் வழித்தடத்தின் பெருமை உங்கள் வாக்குகளையே சேரும். " என்றும் கூறினார்.