காங்கிரஸில் இருந்து வெளியேறி உருவான இரு துருவங்கள்-ஒரு ஒப்பீட்டு

காங்கிரஸில் இருந்து வெளியேறி உருவான இரு துருவங்கள்-ஒரு ஒப்பீட்டு

 • இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை துவக்கியது வெள்ளைக்காரர் ஆலன் ஆக்டாவியான் ஹூம் என்ற
 • பிரிட்டிஸ்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு மாபெரும் தேசத்தின் முதல் அரசியல் கட்சி என்ற
 • அந்தஸ்துடன் இருந்த காங்கிரஸ், நல்ல கொள்கைகளே இல்லாத காரணத்தால் கக்கன், காமராஜ், சர்தார்
 • வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் போன்று சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்ட தன்னலமில்லா
 • தலைவர்களையே அரசியல் காழ்புணர்ச்சியால் இழந்து, குடும்ப கட்சி ஆன வரலாறும் நாம் நன்கு
 • அறிவோம். அப்படிப்பட்ட காங்கிரஸிலிருந்து வெளியேறிய வேறு இரு தலைவர்கள், அவர்கள் உருவாக்கிய
 • இயக்கங்கள் எப்படி என்பதையும் ஆராயலாம்.|

 • இயக்க துவக்கம்:

 • திராவிடர் கழகம் துவங்கப்பட்டது ஆண்டு 1944. அன்றைய காலத்தில் சாதிக்கொடுமை இந்த சமூகத்தின்
 • தலையாய பிரச்சனை. இதை ஒழிக்க துவங்கப்பட்டது தி.க. ஆனால் இன்றைக்கும் சாதிக்கொடுமையை
 • தீராத பிரச்சனையாக மாற்றியது இந்த இயக்கம் தான் என்பதே கொடுமை.
 • ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் [ஆர்.எஸ்.எஸ்] 1925 ஆண்டே வெறும் பத்து இளைஞர்களுடன்
 • துவக்கப்பட்டுவிட்டது. எந்த விளம்பரமும் இல்லாமல் அந்த இயக்கத்தினரின் சொந்த முயற்சிகளாலும்
 • நன்னடத்தையாலும் நாடு முழுக்க நிதானமாக வளர்ந்தது. இந்த வருடத்துடன் 95 வயதாகும் இந்த
 • இயக்கமானது, நாட்டில் அனைத்து கிராம நகரங்களிலும் ஜீவநதியாக பரவி இன்று உலகிலேயே பெரும்
 • இயக்கமாக கம்பீரமாக செழித்து வளர்ந்து நிற்கிறது என்பது உண்மை.
 • நிறுவனர்கள்

 • திராவிடர் கழகத்தினரால் ‘பெரியார்’ என்று அழைக்கப்படும் அதன் நிறுவனர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
 • சாதி பிரச்சனையை ஒழிக்க நினைத்தவர் தன் சிந்தனையை ஒரு குண்டு சட்டிக்குள் விட்டதுபோல
 • மாட்டிக்கொண்டார். அதாவது சாதிக்கொடுமையை நீக்க முயற்சிப்பதை விட்டு ஒரு குறிப்பிட்ட சாதியையே
 • திட்டிக்கொண்டு அதன்மீது வெறுப்புணர்வை வளர்த்துவிட்டு அவரை நம்பிய மக்களையும் நேர்மையாக
 • சிந்திக்கவிடாமல் வைத்திருந்தார்.

 • ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நிறுவியவர் ‘டாக்டர்ஜி’ என்று அழைக்கப்படும் மருத்துவர் கேசவ பலிராம்
 • ஹெட்கேவார். இந்த தேசத்தில் பிறந்த அனைவருமே சாதி மத இன மொழி பேதங்கள் தாண்டி
 • சகோதரர்களே என்ற ‘ஹிந்துத்துவ’ கொள்கை கொண்டார். பெரும்பாலும் இந்து சமுதாய மக்களே இதில்
 • உறுப்பினராக இருந்தாலும் இஸ்லாமிய கிறிஸ்துவ மக்கள் உட்பட பிற மதத்தவரும் கணிசமான அளவு
 • உறுப்பினர்களாகவும் இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். இவர்கள் ஆண்டின் அனைத்து
 • நாட்களிலும் தினமும் காலை வேளைகளில் ஒன்று கூடி நடத்தும் தேக பயிற்சி சந்திப்பில் பிற மதத்தவரும்
 • தயக்கமில்லாமல் கலந்து கொள்வது கண்கூடு! ஏனென்றால் இவர்களின் எந்த சந்திப்பிலும் எதிர்மறை
 • விஷயங்களோ வெறுப்பு பிரச்சாரமோ செய்வதில்லை என்பதே இதன் வெற்றி! இன்றுவரை இந்த
 • இயக்கத்தின் பொறுப்பு பதவிகளும் எந்த பேதங்களும் பார்க்காமல் குழுவாக விவாதித்து தேர்ந்தெடுக்கும்
 • பழக்கம் நடக்கிறது. 

 • இயக்க பணிகள் / மைய கொள்கைகள்:

 • சில எடுத்துக்காட்டுகள் கவனிப்போம். பகுத்தறிவு என்ற பெயரில் ஈ.வே.ரா என்ன செய்தார்? அந்த
 • காலத்தில் கள் குடிக்கும் பழக்கத்தை தடுப்பதாக நினைத்து தனக்கு சொந்தமான 200 தென்னை மரங்களை
 • ஒரே இரவில் வெட்டி போட்டார்! இந்த சிறு பகுத்தறிவு கூட இல்லாமல் தானும் கெட்டு தமிழ்நாட்டில்
 • இரண்டு தலைமுறை மக்களையும் சிந்திக்க விடாமல் அதுதான் பகுத்தறிவு என்றே நம்பி வாழ வைத்தார்.
 • பெண் விடுதலை என்று பிரச்சாரம் செய்தவர், தன் மனைவி கோவிலுக்கு போவதை தடுக்க எண்ணி, தன்
 • நண்பர்களை விட்டே தன் மனைவியை “ஊரில் புது தாசி” என்று கோயிலுக்குள்ளேயே கிண்டலடிக்க
 • வைத்தார். இந்த செய்திகளை இந்த இயக்கத்தினர் வெளியிட்ட புத்தகங்களிலேயே காணலாம்.
 • சாதிய கட்டமைப்பு என்பது இந்து மதத்தின் மீது மாபெரும் குற்றச்சாட்டாக இருந்தது, இதை இந்த
 • கொடுமையை களைய ஆர்.எஸ்.எஸ் ஒரு மாபெரும் காரியத்தை 1969 ஆண்டு செய்தது! அது என்ன? இந்த
 • தேசம் முழுதும் பரவிக்கிடக்கும் அத்தனை ஜைன-பௌத்த-சீக்கிய, வீர சைவ-வைணவ,
 • சங்கராச்சாரியார்கள் மற்றும் பிற ஆன்மீக பெரியோர்களையும், ஹரிஜன மக்கள் அவர்கள்
 • தலைவர்களையும் ஒரே இடத்தில் உடுப்பியில் ஒரு சந்திக்க ஏற்பாடானது! இது சுலபமான காரியமாக
 • இருக்கவில்லை. ஒரே இடத்தில் சுமார் 15000 பேர் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் எல்லாரையும்
 • மேடையில் நிற்க வைத்து “நம் கடவுளர் சாதியை போதிக்கவில்லை; சாதிக்கொடுமை குற்றமான செயல்;
 • நாம் அனைவரும் சகோதரர்கள்”, Hindavah Sahodara Sarve’ (All Hindus are brothers) என்று ஒரு
 • குரலில் சொல்ல வைத்தது ஆர்.எஸ்.எஸ். அதுவரை நிகழ்ந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும்
 • அமைந்தது! ஆர்.எஸ்.எஸ்’ன் இந்த சாதனை பாரத தேசம் முழுதும் நல்ல அதிர்வலைகள் உருவாக்கியது.
 • மக்களிடம் ஒற்றுமை உருவாக ஆரம்பித்து, அகில தேசமும் ஆர்.எஸ்.எஸ் மீது கவனம் கொண்டது இதற்கு
 • பின்பு தான்!

 • ஆனால் முன்சொன்னது போல தி.க தன் நிலையில்லாத சரியில்லாத கொள்கைகளாலேயே அழிந்தது.
 • ஈ.வே.ரா இயக்க நிறுவனர் எப்படி தன்னையே ஏமாற்றிக்கொண்டார்? சாதி ஒழிப்பும் கடவுள் மறுப்பும்
 • அவர் கொள்கை. அவர் என்ன நினைத்தார்? பார்ப்பான் தான் சாதியை உருவாக்கினான், அவனே தான்
 • சாமியையும் உருவாக்கினான், அதனால் பார்ப்பானை ஒழித்தால் போதும் கடவுளை ஒழித்து விடலாமே!
 • ஆனால் உண்மை மாறாக இருந்தது! ஏனென்றால் எந்த சாமியும் - சிவன், விநாயகர், முருகன், திருமால்,
 • துர்கை, காளி, சரஸ்வதி, ஐயனார், முனீஸ்வரர் என்று இந்த நாடு மக்கள் வழிபட்ட கடவுள்கள்
 • பார்ப்பனராக இருக்கவில்லையே. வால்மீகி வியாசர் முதற்கொண்டு இதிகாசங்களை எழுதியவர்களும்
 • பார்ப்பனராக இருக்கவேயில்லை.

 • திராவிடர் கழகம் பட்டியல் இன மக்களின் விடுதலைக்காக போராடியது என்று அவர்களின்
 • பிரச்சாரங்களில் காண்கிறோம். ஆனால் அவர்கள் அதற்கு ஆதாரமாக சொல்லும் வைக்கோம் ஆலய
 • நுழைவு போராட்டத்தில் ஈவேரா காங்கிரஸில் இருந்தபோது தன் கலந்து கொண்டார் என்பதையும்
 • மறைத்து, தமிழ்நாட்டு பள்ளி பாடநூல்கள் வரை வரலாற்றை திரித்து தி.க இயக்கம் வெளியிட்டது. இதுவே
 • தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்தது என்பதை அறியும்போது நாம் நம்மையே
 • நொந்துகொள்கிறோம்!

 • வைக்கோம் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்ட ஸ்ரீ நாராயண குரு, குமரன்
 • ஆசான், மாதவன் ஆகியோர் ஆவர். நாம் நேரே வைக்கோம் சென்று “வைக்கோம் வீரர் தந்தை பெரியார்”
 • என்று சொன்னால் அங்கிருக்கும் சேட்டா நம் சோட்டா மேலே ஒரு வைப்பான் என்றே நமக்கு கிடைக்கும்
 • நம்பத்தகுந்த வட்டார செய்திகள் கூறுகின்றன.

 • ஆர்.எஸ்.எஸ் நிறுவிய ஹெட்கேவார் நிலையான கொள்கைகள் முன்னிறுத்தினார். நாட்டு மக்கள் புத்தி
 • கூர்மையுடனும் உடல் வலிமையுடனும் இருந்தால்தான் நாளைய சமுதாயம் வளர முடியும் என்ற
 • தொலைநோக்கு பார்வை கொண்டார். அவரின் தெளிவான கொள்கைகளால் சாதிக்கொடுமையும்
 • மூடநம்பிக்கைகளும் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்தது, மக்கள் தைரியமாக வந்து

 • இயக்கத்தில் இணைந்துகொண்டனர். இந்த இயக்கத்தில் தேசபக்தியை வளர்ந்தது. அவருக்கு பின்னர் வந்த
 • தலைவர்களும் இயக்கத்தில் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையுடன் பலமாக்கினர்.
 • ஈ.வே. ராமசாமியோ, திருவள்ளுவர், கம்பர், இளங்கோ அடிகள் என்று தமிழையும் தமிழ் புலவர்களையும்
 • வெறிகொண்டு வசைபாடினார். திருக்குறள் ஆரிய திணிப்பு என்றும் சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை
 • என்றும் இவரின் பேச்சுக்கள் தமிழ் மீது இவரின் வெறுப்புணர்வையே நமக்கு புரியவைக்கின்றன. அவரின்
 • இயக்கத்தினர் நாளடைவில் அவரை திட்ட ஆரம்பித்து விலக ஆரம்பித்தனர்.

 • ஈ.வே.ரா இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமென்று அறிவித்தார். பிரிட்டிஷ் நம் நாட்டை சுதந்திரமாக
 • அறிவித்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டிஷ் லண்டனில் இருந்தாவது இந்தியாவை ஆள
 • வேண்டும் என்று கடிதம் எழுதினார். இந்தியா ஒரு குண்டூசி கூட உற்பத்தி செய்ய தெரியாத நாடு என்றும்
 • தி.க இயக்கம் அறிவித்தது பச்சை தேச துரோகம். கட்டிய மனைவியை நண்பர்களை விட்டே தாசி என்று
 • வசைபாடிய ஒரு தலைவர் துவக்கிய தி.க இப்படி மாறிப்போனது நமக்கு வியப்பை தரவில்லை.
 • ஆர்.எஸ்.எஸ் நிறுவிய ஹெட்கேவார் சிறந்த தேச குடிமக்களை உருவாக்கினார். இந்த ஆன்மிக தேசத்தை
 • உலகம் பாராட்டும் நாடாக ஆக்குவோம் என்று உறுதியேற்க வைத்தார். “பேசும் மொழி பலவானாலும்
 • மாநிலம் பலவாய் பிரிந்திருந்தாலும் மக்கள் நாம் ஒன்றே; வங்கள தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு
 • ஹிந்தியும் எங்களதே” என்று தினமும் தவறாமல் அவரவர் மொழிகளில் பாடலை பாடுகின்றனர். இன்று
 • இந்த இயக்கத்தினர் நாட்டின் எல்லா அரசு-தனியார் நிறுவனங்களிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்!
 • பணி நேரம் போக தன்னலமில்லாமல் மக்கள் சேவை செய்கின்றனர்.

 • இயக்கங்களின் இன்றைய செயல்பாடுகள்:

 • எந்த இயக்கமானாலும் அது வளர்ச்சியடைய பன்முகத்தன்மை வேண்டும், அனைத்து மக்களையும்
 • அரவணைக்க வேண்டும். செயல்களில் வேறுபாடே காட்டக்கூடாது.
 • திராவிடர் கழக இயக்கம் செல்வத்தால் வளர்ந்தாலும் அது ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அரசியல்
 • கட்சி தயவுடன் காலம் தள்ளுகிறது. பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரில் வயதான அந்தணர்களை போகும்
 • வழியில் மடக்கி அவர்களின் குடுமியை அறுப்பது, இந்து கடவுளரின் சிலைகளில் செருப்பு மாலை
 • போடுவது, இந்து மத சடங்குகளை மட்டும் கிண்டலடிப்பது, பெண்களின் தாலியை அறுப்பது, பன்றியை
 • பிடித்து பூணுல் போடுகிறேன் என்று அந்த ஜீவனை இம்சை செய்வது சில்லறைத்தனமான விஷமங்களை
 • தான் இந்த இயக்கத்தின் நிறுவனர் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றிருந்தார். இந்த லுச்சாத்தனமான
 • காரியங்களால் ஒரு பயனும் இல்லை நாம் தான் ஏமாறுகிறோம் என்று உணர்ந்துவிட்ட மக்கள் இந்த
 • இயக்கத்தினரை பார்த்தாலே ஓசி சோறு எச்சை சோறு என்று கிண்டல் செய்கிறார்கள். தி.க’வின்
 • நாடகங்கள் பட்டவர்த்தனமாகின.
 • ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பல கிளைகள் கொண்ட ஆல மரமாக நிற்கிறது. சேவா பாரதி, வித்யா பாரதி,
 • பாரதீய மஸ்தூர் யூனியன், விவேகானந்த கேந்திரம், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்று 50கும்
 • மேற்பட்ட கிளை இயக்கங்களாக வளர்ந்து- ஏழை மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், என்று பல்வேறு
 • தரப்பு மக்களையும் அரவணைத்து ஒரே தேசம் என்ற கொள்கையில் நூறாண்டுகள் நோக்கி பலமாக
 • பயணிக்கிறது.

 • இயக்க தலைவர்கள்:

 • தி.க தன் சொத்துக்களை காப்பாற்ற தன் தொண்டர்கள் மீதே நம்பிக்கை இல்லாமல் தேர்தலோ
 • ஆலோசனைலோ இல்லாமல் ஒரு இனத்தவரே தலைமை ஏற்கும் முறை. தனிநபர் துதி தற்பெருமை
 • பேசுதல் போன்ற நீச பழக்கங்களும் தி.க’வில் ஏராளம்.

 • ஆர்.எஸ்.எஸ் குழுவாக ஆலோசித்து அனுபவம், நிர்வாக திறன், தியாகம் ஆகியவை ஆராய்ந்து
 • தலைமையை தேர்ந்தெடுக்கும் திறன். தனிநபர் துதி பாடாமல் பாரத தாய் , தேச பக்தி இவற்றையே
 • முன்னிறுத்தும் தன்னலமில்லா சேவகர்கள் கொண்ட ஆர்.எஸ்.எஸ்!

 • இயக்க தொண்டர்கள்:

 • அதிகாரபூர்வ தகவல் இல்லாமல் தி.க இயக்கத்தில் இன்று தமிழ்நாட்டில் 5000 வரை உறுப்பினர்கள்
 • இருக்கலாம்.
 • ஆர்.எஸ்.எஸ்’ல் இந்திய தேசம் முழுதும் சேர்த்து தன்னார்வமாக 5,00,000 உறுப்பினர்கள் 15000 முழுநேர
 • ஊழியர்கள், 100000 ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும்
 • நாள் தவறாமல் காலை வேளையில் தினமும் சந்தித்துக்கொள்கிறார்கள். தங்கள் கருத்துக்களை
 • பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்து சகோதரத்துவம் பேணுகிறார்கள்.
 • மேலும், ஆர்.எஸ்.எஸ் தமிழகம் முழுக்க கிராம-நகரங்களில் 3000 கிளைகளோடு 1.5 லட்சத்திற்கும்
 • மேலான உறுப்பினர்களோடு தன்னார்வர்களோடு தினந்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
 • ஆர்.எஸ்.எஸ்’ற்கு 15 வெளி நாடுகளிலும் கிளைகள் உண்டு.

 • முடிவுரை :

 • ஏற்கனவே சாயம் போக துவங்கிவிட்ட தி.க’வினருக்கு அதன் இயக்கத்தினரே முடிவுரை எழுத
 • ஆரம்பித்துவிட்டதால் நாம் தனியாக எழுத அவசியமும் இல்லை. தலைமைப்பண்புக்கு உண்டான
 • சுயஒழுக்கம் கட்டுப்பாடு கூட இல்லாததுமே இதற்கு மிகப்பெரிய வீழ்ச்சி. பகுத்தறிவு, சாதி ஒழிப்பு
 • இவையே தன் கொள்கைகள் என்று முழங்கி எல்லாவற்றிலும் கேலியாக-ஒரு நகைச்சுவையாளராக மாறி
 • தி.க தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1973 ஆண்டு 94 வயதில் காலமானார்.
 • இந்த நாட்டின் மிகச்சிறந்த தவப்புதல்வராக வாழ்ந்த தேசியவாதி டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்,
 • ஒவ்வொரு ஆண்டும் பலம் கூடி திடமாக நிற்கும் இயக்கத்தை நிறுவியிருக்கிறார், 1940 ஆண்டு 51 வயதில்
 • காலமானார். அவர் துவக்கிய இயக்கம் தன்னலமில்லா சுயம்சேவகர்களை கொண்ட ஆர்.எஸ்.எஸ்
 • இயக்கம் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்கிறோம் எனும்போது பெருமிதம் ஏற்படுகிறது!
 • - Ganesh