" காங்கிரஸும் ஹிந்து விரோதமும் பிரிக்க முடியாத உறவு"

" காங்கிரஸும் ஹிந்து விரோதமும் பிரிக்க முடியாத உறவு"

ஹிந்து உணர்வுகளை புண்படுத்திய ப்ரியங்கா காந்தி வாத்ரா,

மோடியை எதிர்க்க ராஹுல்காந்தியால் முடியாது என முடிவு செய்து, ப்ரியங்கா காந்தி வாத்ராவை கட்சிப்பொறுப்புக்கு இழுத்துள்ளது காங்கிரஸ்.  

அவரது கணவர் ராபர்ட் வாத்ரா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் அவர். கணவர் மீது நடவடிக்கை எடுத்தால், பழி வாங்கும் நடவடிக்கை என்றுக்கூறி அனுதாபம் தேடும் முயற்சியாகவும், ப்ரியங்காவின் அரசியல் பிரவேசம் உள்ளது.

பெயரளவில் தான், அரசியல் பிரவேசம் இப்போது நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே அவரும், கணவர் ராபர்டும் காங்கிரஸ் கட்சியில் ஆளுமை செலுத்துபவர்கள் தான். 

நேற்று ப்ரியங்கா தலைமையில் காங்கிரஸ் சார்பில் ஒரு வரவேற்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான வரவேற்பு போஸ்டர்களில் ப்ரியங்கா காந்தி வாத்ராவை துர்க்கையாக சித்தரித்து இருந்தன.  இதை கண்ட பொதுமக்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒட்டு வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கீழ்த்தரமான செயலை செய்துள்ள காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளனர். கிறிஸ்தவரான வாத்ராவை மணந்தவர் ப்ரியங்கா, அவரை துர்கையாக சித்தரித்தது,  ஹிந்துக்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது