காங்கிரஸூடன் கூட்டணி ஏன்? - திமுகவுக்கு மோடி கேள்வி

காங்கிரஸூடன் கூட்டணி ஏன்? - திமுகவுக்கு மோடி கேள்வி

மாநில அரசுகளின் விருப்பங்களை நிறைவேற்றாததுடன், சக்தி வாய்ந்த மாநிலத் தலைவர்களை அவமதித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்று திமுகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

பன்முகத் தன்மை வாய்ந்த நாடான இந்தியா பல மாநிலங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த மாநிலங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது. காங்கிரஸ் ஒருபோதும் மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டதில்லை. தில்லியில் உயர் இடத்தில் இருந்து கொண்டும், குடும்ப நலனையும் கருத்தில் கொண்டே காங்கிரஸ் கட்சியானது முடிவுகளை எடுக்கிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரிப்பது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களை ஆதரிப்பது போன்றதாகும். 

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மட்டும் 50 மாநில அரசுகளை கலைத்துள்ளார். திமுக அரசு கூட கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவுக்கு கொள்கைகளை விட சந்தர்ப்பவாத அரசியலே முக்கியமானதாகப் போய் விட்டது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசையும் காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது. இது போன்ற கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது ஏன் என்று கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்டார்.