காங்கிரஸ் கட்சியின் புதிய வரவு – பிரியங்கா வதேரா

காங்கிரஸ் கட்சியின் புதிய வரவு – பிரியங்கா வதேரா

      காங்கிரஸ் கட்சிக்கு புதிய வரவாக ராகுல் காந்தியின் சகோதரி திருமதி பிரயங்கா வதேரா உத்திர பிரதேசத்தின் வடக்கு பகுதியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தனது சகோதரன் ராகுல் காந்தியால் ஆட்சி பறிபோன உத்திர பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை அரியணையில்  ஏற்றிட சபதம் ஏற்று களத்தில் இறங்கியுள்ளார். தாயும் தனயனும் செய்ய முடியாத செயலை செய்ய களமிறக்கப்பட்டுள்ளார்.  உண்மையில் ஊடகங்களில் வரும் செய்திகள், திருமதி பிரியங்கா வதேரா பார்ப்பதற்கு திருமதி இந்திரா காந்தியாக காட்சி தருகிறார் என்ற செய்தியை மட்டுமே பரப்புகிறார்கள். ஆனால்,  திருமதி இந்திரா காந்தியே மறு பிறவி எடுத்து வந்தால் கூட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டமுடியுமா என்பது சந்தேகம் தான்.    சரி காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட நமக்கு உரிமை கிடையாது.  ஆனால் திருமதி பிரியங்கா வதேரா அரசியலுக்கு வந்த பின்னர், சில விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.  சுமார் 10 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை முழுமைய விளக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

1.      ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினியை வேலூர்  சிறையில் சந்தித்த சம்பவத்தை பற்றிய விளக்கம் தேவைப்படுகிறது.  19.3.2008ந் தேதி ரகசியமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த  தண்டனை கைதி திருமதி நளினி முருகனை, ராஜீவ் காந்தியின் மகள் பிரிங்கா காந்தி தனிமையில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.  இந்த சம்பவத்தை எவரும் தெரிவிக்கவில்லை.  மாறாக சென்னையை சார்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார் தகவல் அறியும் சட்டத்தின் படி, இது சம்பந்தமாக சில கேள்விகளை எழுப்பிய பின்னர் தான், நளினி பிரியங்கா சந்திப்பு செய்தி வெளியே வர துவங்கியது.  இந்த சந்திப்பின் என்ன பேசினார் என்பதை திருமதி பிரியங்கா வதேரா பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.  ஏன் என்றால்  இந்த சந்திப்பிற்கு பின்னர் தான், மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கலாம் என சோனியா காந்தியின் விரும்பம் தெரிவித்தாகவும், நீதி மன்றம் இதனை ஏற்று தண்டனையை மாற்றி கொடுத்தது என்றும் கூறப்பட்டது.

       ஆகவே, அரசியல் களத்தில் இறங்கியுள்ள திருமதி பிரியங்கா 10 வருடங்களுக்கு முன் நளினியை சந்தித்த நிகழ்வுகளை வெளியே கொண்டு வர வேண்டும்.   நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி தண்டனையும் வழங்கப்பட்ட பின்னர், அவருக்கு மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது எவ்வாறு?,  என்பதை தற்போது விளக்க வேண்டும்.  பிரியங்கா நளினியை சந்தித்த பின்னர் தான் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது என்பதை தற்போது நினைவுப்படுத்த வேண்டும்.  ஆகவே திருமதி பிரியங்கா வதேரா இந்த பிரச்சினையை தெளிவுப்படுத்த வேண்டும். 

2. அடுத்த கேள்வி 2004 முதல் 2014 வரை  ஆட்சியில் வதேராவின் தலையீடு எவ்வாறு இருந்தது என்பதற்கு சான்றுகள் பல இருக்கின்றன.  அதைப் பற்றி இதுவரை பிரியங்கா வாய் திறக்கவில்லை.  எனவே பல குற்றச்சாட்டுகள் இருந்தும், அதில் சில குற்றச்சாட்டுகளை பற்றிய விளக்கங்கள் பிரியங்கா கொடுக்க வேண்டும்.  ஏன் என்றால் அரசியல் களத்தில் இறங்கியது மட்டுமில்லாமல், ஒரு மாநிலத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுள்ளார், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என கூறும் இவர், சாத்தான் வேதம் ஓதும் நிகழ்வாக மாறிவிடக் கூடாது.

       மோசடியின் மொத்த உருவம் ராபர்ட் வதேரா என்றால் மிகையாகாது.  ரூ3.5 லட்சம் கோடி மகா ஊழல் நாயகன் என வர்ணனை செய்யுபடும்  ராபர்ட வதேரா பரிசுத்தமானவர் என்றால்  அரசியல் களத்தில் உள்ள பிரியங்கா விளக்கம் கொடுக்க வேண்டும்.  இன்று மோடியை எதிர்க்கும் அரவிந்த் கெஜரிவால், ராகுலின் நண்பர்  என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்,  இவர் சுமத்திய குற்றச்சாட்டு, குர்கான் அருகேயுள்ள சிகோபூர் கிராமத்தில்,  நிலம் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாகவும், இந்த மோசடிக்கு பத்திரபதிவு மற்றும் நில ஆவணத் துறை அதிகாரி அசோக் கெம்கா முட்டுக்கட்டை போட்டதால், உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்  என்றார்.   இதற்காக ஹரியான காங்கிரஸ் அரசு மூவர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை நடத்த கோரியது, விசாரணையில்  வதேரா குற்றமற்றவர் என அறிக்கை தெரிவித்தது.   ஆனால் உண்மையில் நடந்தது வேறு என அசோக் கெம்கா டேர் டெலில் நிகழ்ச்சியில் கரன்தாப்பரிடம் விலாவாரியாக விவரித்துள்ளார். திருவாளர் அசோக் கெம்கா கூறியவை உண்மையா இல்லையா என்பதை பிரியங்கா விளக்க வேண்டும்.

       3. நிலக்கரி ஊழலுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில்  மிகப் பெரிய அளவில் இரண்டாம் இடத்தில் ஊழலின் கதாநாயகன் ராபர்ட் வதேரா.  விவசாய நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஏதாவது ஒரு காங்கிரஸ் தரகருக்கு குறைந்த விலையில் கொடுப்பது மற்றும கொடுக்க வைப்பது  முதல் வேலை.  சில சமயம் அவ்வாறு வாங்கப்படும் நிலம் நகர வளர்ச்சிக்காக என திட்டமிட்டு, ரபார்ட் வதேராவின் நிறுவனத்திற்கு விற்கப்படும், அப்படி நிலம் பின்னர் டி.எல்.எப். நிறுவனத்திற்கு கைமாறும். இந்த வேலையை  2007 முதல் 2010 வரை ராபர்ட் வதேரா ஐந்து புதிய கம்பெனிகள் தொடங்கியிருக்கிறார்.  அதில் ஒன்று ஸ்கை லைட்  ஹாஸ்பிட்டாலிட்டி.  இந்த நிறுவனம் சீக்காபூர் என்ற இடத்தில் டி.எல்.எஃப் எழுப்பும் ஓர் ஆடம்பர குடியிருப்புக்கு அருகில் 3.5 ஏக்கர் நிலத்தை 12.30 கோடிக்கு வாங்கி அதை டி.எல.எஃப் நிறுனத்திற்கு 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டது.  இதில் வேடிக்கை என்னவென்றால் வெறும் ரூ50 லட்சத்தில் துவக்கப்பட்ட ஸகை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம்  குறுகிய காலத்தில் ரூ12.30 கோடிக்கு எப்படி நிலம் வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதில் கிடையாது.   இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், நிலம் வாங்கி ஒரு இரவுக்குள் விற்பனை செய்ததில் ராபர்ட் வதேராவிற்கு கிடைத்த லாபம் மட்டும் 37 கோடிக்கு மேல் என்றால், உலகில் மிகப் பெரிய தொழில் அதிபருக்கு கூட கிடைக்காத லாபம் இவருக்கு எப்படி கிடைத்து என்பதை திருமதி பிரியாங்க வதேரா விளக்க வேண்டும்.

4.     திருவாளர் பரிசுத்தம் ராபர்ட் வதேரா ஒரு இரவில் ரூ37 கோடிகளுக்கு மேல் லாபம் எவ்வாறு கிடைத்தது என கேள்வி எழுப்பியவுடன், எங்கள் நிறுவனம் ஒரு லிமிடெட் கம்பெனி, அதன் ஆண்டு அறிக்கைகள் ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எவரும் பார்க்கலாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இது பற்றி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அந்த கட்டுரையில் எழுப்பபட்ட சந்தேகங்களுக்கு இதுவரை பதில் கிடையாது.  எழுப்பிய சந்தேகங்கள், நிலம் வாங்க திரட்டப்பட்ட 12.30 கோடியில் ரூ7.94 கோடி கார்ப்பரேஷன் வங்கி  ஃபிரண்டஸ் காலனி கிளையிலிருந்து  ஓவர் டிராஃப்டாக பெற்றதாக கம்பெனியின்  பாலன்ஸ் ஷீட்டில் சொல்லப்பட்டிருந்தது.  வெறும் 50 லட்சம் மட்டும் முதலீடு செய்த ஒரு நிறுவனத்திற்கு ஒரு வருடம் முடியும் முன் அரசுடமையக்கப்பட்ட வங்கி 7.94 கோடி ரூபாய் கடனாக எவ்வித செக்யூரிட்டியும் இல்லாமல் கொடுத்தது என்றால் எப்படி கொடுக்க முடியும்?   இரண்டாவது மீதி பணத்தை கடனாகத் தந்த ஏர்டெக்ஸ் நிறுவனத்தின் ஆண்டின் மொத்த லாபமே சில லட்சங்கள் தான் என்றால் பணம் எங்கிருந்து வந்தது?

       டி.எல்.எப். நிறுவனம் வட்டியில்லா கடனாக ரூ65 கோடி ரபார்ட் வதேராவிற்கு வழங்கியதாக கூறப்பட்டது.  எந்த உத்திரவாதமும் இல்லாமல் ஒரு நிறுவனத்திற்கு  ரூ65 கோடி கடனாக வழங்கப்படுகிறது என்றால், அதனால் ஆதாயம் அடைய முடியும் என்பதால் தான் கடனாக வழங்கப்பட்டது என்ற உண்மையை மறைத்தது முன்னாள்  ஐ.மு.கூ. அரசு.  இன்று கூட்டணிக்காக ஏங்கும் அரவிந்த் கெஜரிவால்,  மத்திய அரசும், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகளும் குறிப்பாக ஹரியான மாநிலம், டி.எல.எப். நிறுவனத்திற்கு பல சலுகைகளை அளித்துள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்தார்.  இது குறித்து அன்றைய நிதி அமைச்சரும், தன் மீதுள்ள மோடி வழக்கிற்காக இதுவரை ஒன்பது முறை முன் ஜாமீன் வாங்கிய ப.சிதம்பரம், முக்கியத்துவம் இல்லாத குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது மற்றொருவர் சுமத்துவது தனிப்பட்ட நபர்களை சார்ந்தது, இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் விசாரணைக்கு உத்திரவிட முடியாது.  இது சார்பாக அரசு சார்பில் என்னால் பதில் அளிக்க முடியாது என கூறியதை தற்போது நினைவுப்படுத்தி, திருவாளர் ப.சிதாம்பரம். பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம்.

5.     முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்  நூதனமான மோசடி நடந்துள்ளது.   அரவிந்த் கேஜரிவால் அமைப்பைச் சார்ந்த நுதன் தாக்குர் என்பவர் வதேராவின் மோசடி தொடர்பான விசாரணைக்கு உத்திரவிட கோரி தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த பிரமாணப் பத்திரத்தில், அது தொடர்பான விவரங்கள் அரசு ரகசியம் என கூறி விபரங்களை தர மறுத்துள்ளது.  சோனியா காந்தியின் மருமகன் செய்யும் மோசடிகள் வெளி வராமல் இருக்க அரசு ரகசியம் என கூறியிருப்பது அப்பட்டமான அயோக்கியத் தனம் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   ஹரியானாவில்  மட்டும் 21,000 ஏக்கர் வரை உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அதிகாரி கெம்கா கூறியுள்ளா்ர்.  இதில் குர்கான் பகுதியில் மட்டும் 8000 ஏக்கர் நிலம் கையெகப்படுத்தி, வதேராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.   இதனால்,  அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சமார் 3.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

6.     பெங்களுர் கங்கேனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலம் உள்ளது, இதன் மதிப்பு 7 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.  இந்த நிலத்தை வதேராவின் டி.எல்.எப். நிறுவனம் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது.  சட்ட விரோதமாக ஆக்கிரமித்த நிலத்தை சட்டபடி உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சிவக்குமார் முயலுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது பற்றி லோக் ஆயுத்தாவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இது போல் நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் லீலைகளின் பட்டியல் வரிசையாக அணி வகுத்து நிற்கின்றன,  இது பற்றிய முழுமையான விவரங்களை திருமதி பிரியங்கா வதேரா விளக்க வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியலுக்கு வந்துவிட்டால் மக்கள் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்?

- ஈரோடு சரவணன்