காங்கிரஸ், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறது - பகுஜன் தலைவர் மாயாவதி புலம்பல்

காங்கிரஸ், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறது - பகுஜன் தலைவர் மாயாவதி புலம்பல்

 'உத்தர பிரதேசத்தில், ஏழு தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை எனக் கூறி, எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, காங்கிரஸ் முயற்சிக்கிறது' என, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் கட்சிகள் கூறியுள்ளன.லோக்சபா தேர்தலில், இம்மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கூட்டணியில், காங்கிரசை அக்கட்சிகள் சேர்க்கவில்லை. எனினும், 'காங்., தலைவர்கள் ராகுல், சோனியா போட்டியிடும், அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும், வேட்பாளர்ளை நிறுத்தப் போவதில்லை' என, அந்த கூட்டணியினர் அறிவித்தனர்.இதையடுத்து, உ.பி.,யில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், 'பகுஜன், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிடும், ஏழு தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்' என, காங்கிரஸ் அறிவித்தது. 

காங்கிரசுடன், உ.பி., உட்பட, எந்த மாநிலத்திலும், பகுஜன் கூட்டணி அமைக்காது என்பதில், உறுதியாக உள்ளோம். 'உ.பி.,யில்., ஏழு தொகுதியில் போட்டி யில்லை' எனக் கூறிபகுஜன் - சமாஜ்வாதி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, காங்., முயற்சிக்கிறது.உ.பி.,யில், 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை, காங்., நிறுத்தட்டும். பா.ஜ.,வை எதிர்கொள்ள, பகுஜன் - சமாஜ்வாதி கூட்டணிக்கு, காங்., உதவி தேவையில்லை. 

இதே போல் ''எங்கள் கூட்டணியில், தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த, காங்., முயற்சிக்க வேண்டாம்,'' என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.