'காங்கிரஸ் சொல்வது பொய்' - நிர்மலா சீதாராமன்

'காங்கிரஸ் சொல்வது பொய்' - நிர்மலா சீதாராமன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் அவர்,எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சாடினார்.

ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டதாகவும், எனவே கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்றும்  திட்டவட்டமாக தெரிவித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு என்று கூறி, நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக கூறினார்.