காங்கிரஸ் திமுகவை பயங்கரமாக கலாய்த்த பொன் ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் திமுகவை பயங்கரமாக கலாய்த்த பொன் ராதாகிருஷ்ணன்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தரும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தந்தாக வேண்டும் அப்படி தரவில்லை என்றால். அங்கு நடப்பது திமுக வின் கூட்டணி கட்சியின் ஆட்சிதான் எனவே இங்கிருந்து 37 எம்பிக்களும் கிளம்பி கர்நாடகா சென்று தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் மேலும் காவேரி விவகாரத்தில் மத்திய அரசு நியாயமாக செய்ய வேண்டியது கட்டாயமாக செய்யும் என்றார்.