காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெறும் கற்பனை - மாயாவதி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெறும் கற்பனை - மாயாவதி

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ், பாஜக, மாநிலக் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி மறுஆய்வு, நீட்  தேர்வு முறை ரத்து உள்ளிட்ட பலவேறு துறைகளுக்கும் பல சலுகைகளுடன் கூடியதாக இருந்தது. 

இந்த தேர்தல் அறிக்கை குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் இருக்கிறதா. ஏற்கனவே அந்த கட்சி ஏராளமான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து அதை நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது நேற்று வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, மாயை தோற்றம் கொண்டது. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் காங்கிரஸ் கட்சியை இனிமேலும்  நம்பவேண்டாம். வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாத காரணத்தால்தான் மக்கள் அந்த கட்சியை நம்ப மறுக்கிறார்கள்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட  ஒன்று, அது ஒரு மாயை,நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிகள் இல்லாதது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.