காங்கிரஸ் முன்னால் எம் எல் ஏ பாஜக வில் இணைந்தார்

காங்கிரஸ் முன்னால் எம் எல் ஏ பாஜக வில் இணைந்தார்

கர்நாடகாவில் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் நேற்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள், பாஜகவில் இணையப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், சின்சோலி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் கடந்த திங்கள்கிழமை, திடீரென‌ தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுமாறு காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார். இதனை ஏற்காத உமேஷ் ஜாதவ் நேற்று கலபுர்கியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

பாஜகவில் இணைந்துள்ள உமேஷ் ஜாதவ் வருகிற மக்களவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் அங்கு களமிறங்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் மோதி வந்த இவர், தேர்தலில் அவருடன் மோத உள்ளார். இதனால் அங்கு பரபரப்பும், எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.