காந்திக்கு அஞ்சலி

காந்திக்கு அஞ்சலி

தேச பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் அங்கு நடைபெற்ற சர்வமத பிராத்தனையிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.