காந்தி அண்ணலின் நினைவுகளில்

காந்தி அண்ணலின் நினைவுகளில்

காந்தியடிகளின் 71வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 'தியாகிகள் தினம்' ஆகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி,  காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட குஜராத் மாநிலம், தண்டியில் தேசிய உப்பு சத்தியாகிரக நினைவு சின்னத்தை நாட்டுக்கு அற்பணிக்கிறார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தியில், "தியாகிகள் தினத்தில் நாட்டின் விடுதலைக்காக தங்களையே தியாகம் செய்த மகாத்மா காந்தியையும் ஏனைய விடுதலை போராட்ட தியாகிகளையும் தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது." என்று கூறியுள்ளார்.