காம்ரேட்களின் கயமை

காம்ரேட்களின் கயமை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் மக்கள்  விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது கேரள கம்யூனிஸ்ட் அரசு. அதன்  ஒரு பகுதியாக இரண்டு கம்யூனிஸ்ட் பெண்களை மாறுவேடத்தில்  சபரிமலைக்கு அழைத்து சென்றது கேரள அரசு. இதனை கண்டித்து கேரளாவில்  சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு கடந்த வியாழனன்று முழு அடைப்பு  போராட்டத்தில் ஈடுபட்டது. 

அந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதற்கு  இந்து அமைப்புகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அது  கம்யூனிஸ்ட்களின் சதி வேலை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. முழு அடைப்பின் போது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பரா என்ற  ஊரில் இருக்கும் ஜும்மா மசூதி கற்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பழி இந்து அமைப்புகள் மீது விழுந்தது. ஆனால், அங்கிருந்த சிசி டிவி  கேமராக்களை ஆய்வு செய்த போது சிபிஎம் தலைவர்களும் டிவோய்எப்ஐ அமைப்பினரும் தான் மசூதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது  தெரியவந்துள்ளது.

முழு அடைப்பின் போது மசூதியை தாக்கினால், இந்துக்களுக்கும்  இஸ்லாமியர்களுக்கும் இடையே வகுப்பு மோதல் ஏற்படும். அந்த பழி    இந்துக்கள் மீது விழும் என்று கணக்கிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் கம்யூனிஸ்ட்கள். இது தொடர்பாக அதுல் தாஸ் என்பவனை போலீஸார் கைது செய்துள்ளார்கள். 

அதுல் தாஸ் அந்த பகுதி டி.வோய்.எப்.ஐ பொறுப்பாளர். இப்போது இவர் மீது  வகுப்பு மோதலை தூண்டுதல், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்  ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.