கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் தமிழகம்

கார்த்திகை தீப திருநாளுக்கு தயாராகும் தமிழகம்

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரமும் பௌர்ணமியும் சேரும் நாளில் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று பஞ்ச பூத தலங்களுள் அக்கினி தலமான திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். அப்போதே, மக்கள் தங்கள் வீடுகளையும் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீப பண்டிகை வரும் நவம்பர் 23 வெள்ளிகிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளிலும் அகல் விளக்கு விற்பனை களைகட்டிவிட்டது. விதவிதமான கலைநயமிக்க விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் அந்த அகல் விளக்குகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்க தயாரியாகி வருகிறார்கள். கைவினை கலைஞர்களை வாழவைக்கும் கார்த்திகை தீபத்திருநாளை தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.