கார்ப்பரேட் கைக்கூலிகள் ஆக மாறிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள்

கார்ப்பரேட் கைக்கூலிகள் ஆக மாறிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலுபாரதி 45, மற்றும் சரோஜா ஆகியோர் அப்பகுதிலுள்ள் ஒரு விவசாய நிலத்தை காலி மனைகளாக பிரித்து அங்கு செல்ல வசதியாக அப்பகுதியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஒரு ஓடையை அழித்து பாதையாக்க முயற்சித்துள்ளனர். இதனை தடுக்க இப்பகுதியை சேர்ந்த குமரேசன் வேடசந்துார் கோர்ட்டில் 2015ல் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து நேற்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலுபாரதி, மற்றும் சரோஜா சில குண்டர்களை அழைத்து சென்று  மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் ஓடையை மண்ணால் நிரப்பி பாதை அமைக்க முயன்றுள்ளார். இதனை தடுத்த குமரேசனின் மனைவி முத்துலட்சுமியை முயற்சித்தபோது, பெண்னென்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் . இந்தப் புகாரின் அடிப்படையில் வடமதுரை போலிசார் பாலுபாரதி மற்றும் சரோஜவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். பாலுபாரதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.