கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பேருந்து கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 

மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா வட்டத்துக்குட்பட கனகானமரடி கிராமத்தில் காவேரி நதியிலிருந்து வரும் வாய்க்காலில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து விழுந்தது. சமயோசிதமாக வெளியில் குதித்து தப்பிய ஒரே ஒரு சிறுவனை தவிர மற்ற அனைவரும் கால்வாயில் மூழ்கி இறந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.

மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருந்த கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி  அதனை ரத்து செய்து விட்டு மாண்டியா விரைந்துள்ளார்.