காவி உடையில் திரிந்த முஸ்லீம் இளைஞர் - போலீஸ் தீவிர விசாரணை

காவி உடையில் திரிந்த முஸ்லீம் இளைஞர் - போலீஸ் தீவிர விசாரணை

கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் காவி உடையுடன் சுற்றிய மாகாராஷ்டிராவை சேர்ந்த முஸ்லிம் இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஏர்வாடியில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து ஒருவர் சந்தேகம் அளிக்கும் வகையில் சுற்றி வருவதாக போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் வகாப் பெலாரி 27, என 'ஆதார்' அட்டை மூலம் தெரிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், எட்டு மாதங்களுக்கு முன் ஏர்வாடி வந்ததும் தெரிந்துள்ளது. அவரிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் இவ்விஷயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது .