காஷ்மீரில் உருவான பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதங்கள்

காஷ்மீரில் உருவான பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதங்கள்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதல்களில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், பலர் காயமடைந்ததும் நாட்டையே ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது.  தேச பற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், மனதில் சொல்ல இயலாத சோகத்தில் முழ்கியிருந்தார்கள்.   சில புள்ளுருவிகள் இதில் கூட அரசியல் ஆதாயம் தேட முற்பட்டார்கள்.  உண்மையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் பயங்கரவாதம் இவ்வளவு கொடுமையான முறையில் தலை தூக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

          பழையதை கிளரினால் குப்பைகளே வெளியே வரும் என்பது பழமொழி, ஆனால் காஷ்மீர் பற்றிய விவரங்களை குப்பையை கிளரினால் தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.   இன்றைக்கு காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது என்றால், அதற்கு முதன்மையான காரணம், நாடு விடுதலை பெற்ற போது, காங்கிரஸ் தலைவரும், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவும் முதன்மையாக காரணம்.  85, 793 கி.மீ.பரப்பளவு கொண்ட காஷ்மீரில் உள்ள 75 சதவீதமான இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்பதும், இந்தியாவுடன் இணைய விருப்பம் இல்லாதவர்கள் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.  இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கு சால்ரா போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை பயங்கரவாத தாக்குதல் பிரச்சினை முடிவுக்கு வராது.   காஷ்மீரில் தாக்குதல்கள் நடத்தும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரண்டும் தங்களது பயிற்சி முகாம்களை  நடத்தும் இடம் ஆஸாத் காஷ்மீர் எனும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.

          ஆஸாத் காஷ்மீர் என்ற ஒரு புதிய பகுதி உருவாக்க காரணமாக இருந்தவர் நேரு.  பல்வேறு கால கட்டங்களில் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளான, குலாம் முகமது,   Nashir Mohammed Soudozi, Rahil Ahmad Hoshmi, Saifullah Khalid, Syed  Khalid Hussian   ஆகியோர் ஆஸாத் காஷ்மீர் பகுதியில் உள்ள கோடாலி, முஸப்பராபாத், ரவால்காட் பாக், பூஞ்ச் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள்.   உள்துறை அமைச்சாராக இருந்த திருவாளர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை முற்றிலும் அழித்தால் மட்டுமே, பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த இயலும் என கூறினார்.   17 பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் இருப்பதாகவும், இந்த பயிற்சி முகாம்கள் அனைத்தும் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.   சில ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. செய்தி நிறுவனம்,  லஷ்கர்-இ-தொய்பாவில் பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காக வெளிநாடுகளில் வாழ்கின்ற இஸ்லாமிய இளைஞர்கள் ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்துள்ளாக செய்தி வெளியிட்டது.

          காஷ்மீரில் பயங்கரவாதத்தை உருவாக்கவும், அதை தூண்டிவிடவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டெலிஜன்ஸ் எனப்படும் ஐ.எஸ்.ஐ. யாகும்.  இவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கொடுத்த பணியே காஷ்மீரில் கலவரத்தை உருவாக்கி, பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்பது பிரதான நோக்கமாகும்.   காஷ்மீரை மீட்க பாகிஸ்தான் 1948-ல் நடத்திய சண்டையில் தோல்வியடைந்தவுடன், தோல்விக்கு உளவுத்துறையே முதன்மையான காரணம் என லியாகத் அலிகானுக்கு புரிய வைக்கப்பட்டதால், உளவுத் துறைக்கு மாறாக உருவான அமைப்பே ஐ.எஸ்.ஐ.  இதை செம்மைப்படுத்த பாகிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் கேததொம் ( ) என்பவர்.  இவர் ஆங்கில அரசாங்கத்தில் பணியாற்றி, நாடு பிளவுப்பட்ட போது, பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவர்.   ஐ.எஸ்.ஐ.யின் பொறுப்பாளர்கள் பெரும்பாலும் ராணுவ தளபதிகளையே நியமிக்கப்பட்டார்கள்.   ஐ.எஸ்.ஐ.யின் சித்தந்தாமே வேறு மாதிரியானது.   பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் கொடுத்த கட்டளை, இந்திய ராணுவத்திற்குள் ஊடுருவ முடியாவிட்டால், இந்தியாவிற்குள் ஊடுருவுங்கள், நோக்கம் காஷ்மீராக இருந்தாலும், இந்தியா என்பது காஷ்மீர் மட்டுமல்ல என்ற தாரக மந்திரத்தை போதித்த நாடு  இங்கிலாந்து. 

          ஐ.எஸ்.ஐ. உருவானவுடன்,  இந்தியாவை பணிய வைக்க இரண்டு காரணங்களை முன் நிலைப்படுத்தப்பட்டது.  ஒன்று காஷ்மீர், அதி முக்கியமான பணி, அதாவது காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைய வைப்பது, இரண்டாவது நதி நீர் பங்கீடு.  இந்த இரண்டையும் முன் வைத்து தான் ஐ.எஸ்.ஐ.யின் முழு பணியும் அமைந்தது.    துவக்கப்பட்ட காலத்தில் இந்திய ராணுவத்திற்குள் ஊடுருவ வேண்டும், முடியாவிட்டால், இந்தியாவிற்குள் ஊடுருவ வேண்டும், இதன் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.யினர் இந்தியாவிற்குள் ஊடுருவியதால் ஏற்பட்டது, தொடர் பயங்கரவாத தாக்குதல்கள்.    உலக அரங்கில் ஐ.எஸ்.ஐ.யின் முகம் வேறுபட்டது.  உலக நாடுகளின் அன்மை பெறுவதற்காகவே சோமாலியா பஞ்சம், சூடான் பஞ்சம், எத்தியோப்பியப் பஞ்ச காலங்களில் அமெரிக்காவுடன் இணைந்து உதவிகளை புரிந்தது ஐ.எஸ்.ஐ.  இதற்கு முற்றிலும் மாறுப்பட்ட முகம் இந்தியாவில் கானப்பட்டது.  காஷ்மீரில் நடக்கும் நேரடி யுத்தமானாலும், நிழல் யுத்தமானாலும், வெறும் கலவரக் கலாட்டாக்களானாலும்  முன்னணி, பின்னணியில் இருப்பது ஐ.எஸ்.ஐ.   காஷ்மீர் எல்லையில் அத்துமீறல்களை நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தற்கு பாதை அமைத்து கொடுப்பது ஐ.எஸ்.ஐ.

          நான்கு யுத்தங்களுக்கு பின்னர், அமைதியாக இருந்த ஐ.எஸ்.ஐ.யின் கோர தாண்டவம் 2000 மார்ச்சு மாதம் 20ந் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சிட்டிங்புரா என்ற கிராமத்தில் அரங்கேறியது.  ராணுவ உடையில் உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் கண் மூடித் தனமாக அந்த பகுதியில் இருந்த சீக்கியர்கள் மீது  நடத்திய துப்பாக்கி சூட்டில் நூற்றுக் கணக்காணவர்கள் கொல்லப்பட்டார்கள்,  கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவார்கள்.  சீக்கியர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் தாக்கியதாகவே செய்திகள் வெளிவந்தன.  ஆனால் உண்மையில் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவினர் என்பது 2000-ம் வருடம் டிசம்பர் மாதம் சுஹைல் மல்லிக் என்பவனை கைது செய்து, விசாரனை நடத்திய போது தான் தெரிய வந்தது.  இதை திட்டமிட்டு கொடுத்து ஐ.எஸ்.ஐ.  

                உலக நாடுகளின் நிர்பந்தத்தால், பாகிஸ்தான் தன்னுடைய நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை வெளியேற உத்திரவிட்டது என்றாலும், ஐ.எஸ்.ஐ.யின் ஆலோசனையின் படி,  பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் கொடுக்க ஏற்பாடு செய்து கொடுக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதியை ஒதுக்கியது.   அன்று முதல் இன்று வரை பாகிஸ்தானிலிருந்து கொண்டு  காஷ்மீரிலும், பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் தீவிரவாதத்தை வளர்க்கும் அமைப்புகளும், பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்கும் அமைப்புகளுக்கும் பயிற்சி, ஆயுதங்கள் கொடுக்கும் இடமாக இருப்பது பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரத்தின் கொட்லி பிராந்தியம், சுஃமைதா பிராந்தியம், பட்ராஸி பிராந்தியம், டர்க்குடி, முஸஃபராபாத், கில்கிட் போன்ற  பகுதியாகும்.  1948-ல் நேரு செய்த தவறின் காரணமாக, தீவிரவாத அமைப்புகள் செயல்படும் இடம் பாகிஸ்தான் வசம் மாறிவிட்டது.

          மூன்றாவதாக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம், பயங்கரவாத தாக்குதலுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது.   துவக்க காலத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பெயரில் பிரிவினைவாத அமைப்பு செயல்பட்டது.  தற்போது 26 அமைப்புகள் ஒருங்கினைக்கப்பட்டன.  அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், மத ரீதியலான அமைப்புகள் இணைந்து உருவாக்கப்பட்டது ஆல் பார்ட்டி ஹூரியத் கான்பிரன்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   தற்போது பிரிவினைவாத தலைவர்களாக இருப்பவர்கள் மீர்வாஸ் உமர் பரூக், அல்துல் கனி பட், பிலால் லோன், ஹசீம் குரோஷி, ஷபீர் அகமது ஷா என்பவர்கள்  இவர்களில் கூட இரண்டு கருத்துக் கொண்டவர்களும் உள்ளார்கள்.  காஷ்மீர் தனி சுதந்திர நாடாக மாறவேண்டும் என்பவர்களும்,  இரண்டாவது தரப்பினர் பாகிஸ்தானுடன்  இணைந்து விட வேண்டும் என்ற கருத்து கொண்டவர்களும் உள்ளார்.  ஆகவே காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமானால் இந்த பிரிவினைவாத தலைவர்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.  1993-ல் துவக்கப்பட்ட ஹூரியத் மாநாட்டு கட்சி பாகிஸ்தானின் வழிகாட்டுதலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் நேரிடையாகவே பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக களம் காண்டவர்கள்.

          பாரத தேசத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பயங்கரவாத அமைப்புகளும் செயல்படுகின்றன.    ஒன்பது அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன.  ஹிஸ்புல் முஜாஹூதின், லஷ்கர்-இ-தொய்பா,  ஜெய்ஜ்-இ-முகமது, அல் உமர் முஜாஹூதின், ஹர்க்கத் உல் முஜாஹூதின் இதன் முன்னாள் பெயர்  ஹர்கத் உல் அன்சார் என்பதாகும், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் முன்னணி, ஜமைத்-உல்- முஜாஹூதீன் என்பவை.  இதில் பாகிஸ்தானின் ஜமாத் உத் தாவா மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பு லஷ்கர் இ தொய்பா.  சிமி இயக்கம் 2001-ல்  தடை விதிக்கப்பட்டவுடன் இந்தியன் முஜாஹூதின் என்ற மாற்றுப் பெயரில் உலா வருகிறது.  பிரிவினைவாத அமைப்புடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் அமைப்புகளில் லஷ்கர் இ ஒமர், அல்பதார், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டு கட்சி  போன்றவையுடன் 10 அமைப்புகள் உள்ளன.  இவைகளுடன் மேலும் 18 அமைப்புகள் உள்ளன.   ஆகவே இந்த பயங்கரவாத அமைப்பினரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. யை கட்டுப்படுத்த வேண்டும்.

          இவ்வளவு பிரச்சினைகள் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உருவாக காரணம் என்ன என்பதை சற்றே ஆய்வு செய்வது நல்லது.     1947 ஏப்ரல் இந்திய விடுதலை சட்டத்தின் படி, ஆங்கிலலேயர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளுக்கு சுதந்திரம் வழங்கவும்,  500 க்கு மேற்பட்ட சமஸ்தானங்களுக்கு சுதந்திரம் வழங்கும் போது, ஒரு நிபந்தனையுடன் சுதந்திரம் வழங்கியது.  சமஸ்தானங்கள் ஒன்று பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் என்றும், தங்கள் சமஸ்தானம் சுதந்திரமாகவும் செயல்படலாம் என்ற நிபந்தனையுடன் இந்திய விடுதலை சட்டம்  வழி வகுத்து கொடுத்தது.  இதன் காரணமாக உள்துறை அமைச்சர் சர்தார் பட்டோல் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

        மூன்று சமஸ்தானங்கள் மட்டுமே இணைய வில்லை.  ஹைதராபாத் நிஜாம், ஜீனோகாட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் உடனடியாக இணைய வில்லை.  முந்தைய இரண்டு சமஸ்தானங்களின் அரசர் இஸ்லாமியர் என்பதால், பாகிஸ்தானுடன் இணைய  முயன்றார்கள்.  மூன்றாவதாக காஷ்மீர் சமஸ்தானம்.  காஷ்மீர் சமஸ்தானம் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருந்தது. அந்த சிக்கலுக்கு வழி தெரியாமல் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடனே அல்லது பாகிஸ்தானுடனே இணைய உடனடியாக முடிவு எடுக்க தயக்கம் காட்டினார்.

        அந்த சிக்கல் போக்குவரத்து சம்பந்தமானது.  நாடு விடுதலை பெற்ற போது, நாட்டின் எல்லை வரையறை செய்ய வில்லை.  முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகள் எல்லாம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை எல்லைக் கோடு நிர்ணயிக்கும் குழு ஏற்றுக் கொண்டது.  இதன்படி எல்லை மாகாணமாக பஞ்சாபைப் பிரித்தால், ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் பிரதான சாலைகள், ரயில்வே லைன்கள் போன்ற அனைத்தும் பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதை கவனித்தது.  இதைக் கருத்தில் கொண்டால் – ஹரிசிங் ஆண்ட நிலப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்தால் தான் பொருள் போக்குவரத்து, வர்த்தகம் என பல விஷயங்களிலும் காஷ்மீர் கூடுதல் பங்களிக்கும், அதிக வாய்ப்புகளை பெறும் நிலை.   காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தால் அத்தியாவசியப் பொருட்கள் கூட அதிக தூரம் பயணப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .

         பஞ்சாபைப் பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகவும்,  ஒரு புதிய கோரிக்கையும் எழுந்தது.  பஞ்சாபின் மூன்று  தாலுக்காக்கள் குருதாஸப்பூர் உள்ளிட்டவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதாகும்.   இப்படி செய்தால் பாகிஸ்தானின் கசப்பு உணர்வு அதிகரிக்கும் என்பதால், ஆங்கில அரசு விடுதலை அடைந்த பின்னர் எல்லைக் கோடு பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதாக அறிவித்தது.  இந்நிலையில் குருதாஸ்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.  இதானல் காஷ்மீருக்கு சாலை வழி உட்பட பலவகையிலும் அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டது. 

        இந்த நிலை ஏற்படும் என முகமது அலி ஜின்னா எதிர்பார்க்கவில்லை.  இதனால் காஷ்மீரை கைப்பற்ற படையெடுப்பு என்ற ஆயுதத்தை  பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கையில் எடுத்தார்கள்.  1947 அக்டோபர் மாதம் 20ந் தேதி பாகிஸ்தானில் வாழும் மலைவாழ் மக்களை முன்னிலைப்படுத்தி போர் தொடுக்கப்பட்டது.  காஷ்மீரை காக்க வேண்டும் என்பதால், இந்தியாவின் ராணுவ உதவி உடனடியாக தேவையாக இருந்ததால், மகாராஜா ஹரிசிங்  இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் அக்டோபர் மாதம் 26ந் தேதி 1947 –ல் கையெழுத்திட்டார்.   மற்ற சமஸ்தானங்களை இணைக்க என்ன அளவு கோல் இருந்ததே, அதே அளவு கோலில் காஷ்மீர் மாநிலத்தை இணைக்கவில்லை.  இதற்கு முதன்மையான காரணம், மற்ற சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடமிருந்தது, காஷ்மீர் மட்டும் நேரு தனது நேரடி பார்வையில் எடுத்துக் கொண்டார். இதுவே பல் வேறு பிரச்சினைக்கு வழி கோலியது  1947லிருந்து 1950 வரை காஷ்மீரில் ஏற்பட்ட குளறுபடிகளை தனி கட்டுரையில் பார்க்கலாம்.

           1951க்கு பிறகு காஷ்மீர் பிரச்சினை விஸ்வரூம் எடுத்தது.   காஷ்மீர் விவகாரத்தை பற்றிய முழு விவரங்களை பார்ப்பதற்கு முன், ஷேக் அப்துல்லாவின் குள்ள நரித் தனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  1932க்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது.   1932-ம் வருடம் அக்டோபர் மாதம் ஷேக் அப்துல்லா All Jammu & Kashmir Muslim Conference     என்ற பெயர் கொண்ட ஒரு அரசியல் கட்சியை துவக்கினார்.  இந்த அரசியல் கட்சி முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை கொண்ட கட்சியாகவே பார்க்கப்பட்டது.  1934-ல்    மகாராஜா ஹரிசிங்க்கிற்கு எதிராக  responsible government day observed  எனும் போராட்டத்தை துவக்கினார்.  இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்கள் மத்தியிலும், முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் பெரிய வரவோற்பை பெற வில்லை.  ஆகவே முஸ்லிம் அல்லாதவர்களின் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும்,  தனது கட்சியின் பெயரை  National Conference  மாற்றிக் கொண்டார்.  இந்த மாற்றத்தை 28.6.1938-ந் தேதி தனது கட்சியின் செயற்குழுவில் மாற்றம் செய்தார்.  இதை இந்த தருணத்தில் கூற வேண்டிய அவசியம், ஷேக் அப்துல்லாவின் சிந்தனையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை குறிப்பிடப்பட்டது.

       .  1952-ம் வருடம் ஏப்ரல் மாதம், காஷமீரில் உள்ள பிரஜா பரிஷித் கட்சியின் தலைவர் திரு.பிரேம்நாத் டோக்ரா என்பவர் டெல்லியில் பல தலைவர்களை சந்தித்த  போது. ஜம்மு விலும், காஷ்மீரிலும் நடக்கும் சில நிகழ்வுகளை சுட்டிக் காட்டி, இன்னும் ஜம்மு-காஷ்மீர்  சமஸ்தானம் இந்தியாவுடன் முழுமையாக இணையவில்லை என்பதை எடுத்து கூறும் விதமாக சில சம்பவங்கள நடைபெறுகின்றன.  ஆகவே இதற்கு முடிவு கட்டுவதற்கு சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நேருவிடமும், ஷேக் அப்துல்லாவிடமும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தார்.  இந்த கோரிக்கைகளுக்கு ஆட்சியளார்கள் உரிய கவனத்தை செலுத்தவில்லை.  இதன் காரணமாக திரு.பிரேம்சந்த் டோக்கரா, 1952-ம் வருடம் மே மாதம் திரு.சியமாபிரசாத் முகர்ஜியை சந்திக்கிறார்.

         

அடுத்த கட்டுரையில் இரண்டு முக்கியமான விஷயங்களை கானலாம்.  ஒன்று மற்ற சமஸ்தானங்களை காட்டிலும் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் எழும் பிரிவினைவாதத்திற்கும், காஷ்மீரில் எழும் பிரிவினைவாதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன, அந்த வேறுபாடுகள் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.

- ஈரோடு சரவணன்