காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளிடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் மேஜர் உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து வந்த 55 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 முதல் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்திருப்பதாகவும், அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் முதல்கட்ட தகவல்கள் வெளியானது. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.