காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.