காஷ்மீரி அல்லாத இந்தியர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க சட்டத்திருத்தம் - அருண் ஜெட்லி

காஷ்மீரி அல்லாத இந்தியர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க சட்டத்திருத்தம் - அருண் ஜெட்லி

காஷ்மீரில் இதுவரை பிற மாநிலத்தை சார்ந்த இந்தியர் எவரும் ஏன் இந்திய ஜனாதிபதி, பிரதமர் கூட ஒரு அங்குலம் இடம் வாங்கமுடியாது. தற்போது அதை நீக்கி அனைத்து இந்தியரும் நிலம் சொத்து வாங்க அனுமதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசுகையில் தங்களது முதலீடுகளை கொண்டு காஷ்மீரில்  பிற மாநில மக்கள் தொழில் தொடங்க ஏதுவாக இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது. தொழில் வளம் இல்லாதவர்கள், இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தீவிரவாதியாக செல்லும் நிலை உள்ளது. இதை மாற்ற இந்த சட்டத்திருத்தம் உதவும் என கூறினார்.