காஷ்மீர் சட்ட நீக்கம் சரியானதே

காஷ்மீர் சட்ட நீக்கம் சரியானதே

காஷ்மீருக்கு தனிச்சட்டம் அளிக்கும் விதி 370 நீக்கத்தை ஆதரிப்பதாக ஜாமிஅத்- உலமா- ஹிந்த்  என்ற நாட்டின் பெரிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதன் மூத்த தலைவர் மஹமூத் மதானி கூறியதாவது 'காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அங்கு பிரிவினையை தூண்ட நினைக்கும் பாகிஸ்தானின் எண்ணம் என்றும் ஈடேறாது.

மேலும் அவர் கூறியதாவது காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை ஆதரிக்கிறோம் என்றார். கடந்த வாரம் மஹமூத் மதானி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவதத்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.