காஷ்மீர் பிரச்சினைக்கு யார் காரணம்?

காஷ்மீர் பிரச்சினைக்கு யார் காரணம்?

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுக்க, காங்கிரஸ் ஆட்சியாளர்களின் தவறான போக்கு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்இந்தியாவின் முதல் பிரதமர் நேரு  ஆங்கில அரசுக்கு சாதகமான முடிவை எடுத்ததின் காரணமாகவும், தனது நன்பர் ஷேக் அப்துல்லாவிற்கு விருப்பத்திற்கு ஏற்ப சட்ட திருத்தங்கள் செய்ததின் காரணமாகவும்  இன்று வரை காஷ்மீர் பற்றி எரிகிறதுஎரிகின்ற தீயில் எண்ணெய்விடுவது போல், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களின் பேச்சு அமைந்துள்ளது.

           2016 ஜீலை 21ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திருவாளர் பரிசுத்தம் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறிய போது, பிரதமர் மோடி மற்றும் பா... தலைமையிரான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளின் காரணமாகவே காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, என திருவாய் மலர்ந்துள்ளார்காஷ்மீர் பிரச்னை பற்றிய எரிய காங்கிரஸ் கட்சியும், திருவாளர் நேருவும் முக்கியமான காரணம்  என்பதை மறந்து விட்டு, மோடியை விமர்சனம் செய்ய  வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

        (1)) 19.9.1947-ல் டெல்லியில் பிரதமர் நேருவையும், பட்டேலையும் சந்தித்த காஷ்மீர் முதல்வர் திரு. மேஹர் சந்த் மகாஜான்காஷ்மீர் சூழ்நிலையை விவரித்துமகாராஜா இந்தியாவுடன் இணைய முழு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறிய பின்னரும், நேரு உரிய பதிலை கொடுக்காமல், ஷேக் அப்துல்லாவை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததின்  காரணம் என்ன?

       27.9.1947-ல் பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுக்கும் என்றும், இதன் காரணமாக மகாராஜா தேசிய மாநாட்டு கட்சியின் உதவியுடன் நன்பராக மாறுவார் என பட்டேலுக்கு எதன் அடிப்படையில் கடிதம் எழுதினார்?

     30.9.1947-ல் மந்திரி சபை கூட்டத்தில்  காஷ்மீர் இணைப்பு பற்றிய விவாதத்தின் போது. காஷ்மீரில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற கருத்தை யார் கூறியதின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டதுஇந்த கருத்தை உடனடியாக லியாகத் அலி கானுக்கு தெரிவிக்கப்பட்டது ஏன் ?

        பாகிஸ்தான் காஷ்மீரை கைப்பற்ற நடந்த  சண்டையில் இந்தியா ராணுவம் மிகவும் வேகமாக முன்னேறி பாகிஸ்தான் கைப்பற்றிய  வடக்கு பகுதிகளான கில்ஜித், ஸ்கார்டூ, கார்கில் போன்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, பாகிஸ்தானிய ராணுவம் இந்திய எல்லையான காஷ்மீரத்துக்குள் இருந்த போது, ஏற்படாத பிரச்னை,  ஆக்கிரமிப்பாளர்களான பாகிஸ்தானியர்களை துரத்தி  அடிக்கும் போது மட்டும் பிரச்னை ஏற்படும் என கூறி போர் நிறுத்த ஒப்பந்தம் போட மவுன்ட் பேட்டன் நேருவை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தாரே  இது பற்றி உள்துறை அமைச்சர் பட்டேலிடம் நேரு ஆலோசனை ஏன் செய்யவில்லை?

        பழங்குடியினர் காஷ்மீரை ஆக்கிரமித்த போது உள்ளுர் முஸ்லிம்கள், தங்களை விடுவிக்க வந்த படை என்று கருதி, கத்தி கம்புகளை எடுத்துக் கொண்டு  அவர்களுடன் தெருவில் இறங்கிவிடவில்லை.   அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார்கள்ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியினர் நூற்றுக் கணக்கான தன்னார்வத் தொண்டர்களை ஒன்று திரட்டி, பதான் பழங்குடியிருக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்காஷ்மீர் மக்கள், பதான் பழங்குடியினரை விரட்டி அடிக்க வந்த இந்திய ராணுவத்தைத்தான் தங்களை விடுவிக்க வந்த ரட்சகர்களாகப் பார்த்தார்கள்.  1947 அக்டேபார், நவம்பரில் மகாராஜாவின் டோக்ரா படையா? பதான்களின் லஷ்கர் படையா, இந்திய ராணுவமா என்ற கேள்வி எழுந்த போது, காஷ்மீரி மக்கள் இந்திய ராணுவத்தையே தங்களின் நேச சக்தியாகப் பார்த்தார்கள்அவர்களை ஆக்கிரமிப்பு சக்தியாக பார்க்கவில்லைஇந்த நிலை யாரால் மாற்றப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

        பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை  வெளியேற்ற முற்பட்ட போது, நேருவிற்கும் மவுன்ட் பேட்டனுக்கும் உள்ள உறவின் காரணமாக, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டதுஇதன் காரணமாக  பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதிகள் ஆஸாத் காஷ்மீராக மாறியதுஆஸாத் காஷ்மீரை உருவாக்கிய நேரு செய்த மிகப் பெரிய தவறு என்பதை காங்கிரஸ் கட்சி ஏன் உணரவில்லை ? ஆஸாத் காஷ்மீரை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைஇது பற்றி ஏன் முழுமையாக விவாதிக்கப்படவில்லை.

        ) 26.10.1947-ல் மகாராஜா ஹரிசிங் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கவர்னர் ஜெனரல் மவுன்பேட்டன் எந்த  நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்இந்தியாவுடன் இணைந்த 547 சமஸ்தானங்களையும் இணைக்கும் போது போடாத நிபந்தனைகள், காஷ்மீர் மாநிலம் இணையும் போது மட்டும்  மவுன்ட் பேட்டன்  ஏன் போட்டார்இதற்காக மகாராஜா ஹரிசிங்க்கு எழுதிய கடிதத்தில், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைப்பு முடிவு எடுக்கவும் என எழுத வேண்டிய அவசியம் என்ன என்பதை பற்றி நேரு மவுன்ட் பேட்டனுடன் ஏன் விவாதிக்கவில்லை, அதை ஏன் ஏற்றுக் கொண்டார்இந்தியாவுடன்  இணையும் ஒப்பந்தத்தில் மகாராஜா கையெழுத்திட்டதை வரவேற்ற ஷேக் அப்துல்லா கூட எந்த நிபந்தனையும் விதிக்காத போதும், இவ்வாறு கடிதம் எழுத மவுன்ட்  பேட்டனுக்கு யார்  அதிகாரம் கொடுத்தது? என்பதையும் நேரு எப்போதாவது விளக்கியுள்ளாரா ?

        மந்திரி சபையின் ஒப்புதல் இல்லாமல், நேரு .நா. சபை ஆதரவுடன் காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும் என வானெலியில் பேசியது சரியாஉள்துறை அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல், மவுன்ட்  பேட்டன் கூறிய ஒரே காரணத்திற்காக  தன்னிச்சையாக .நா. சபைக்கு கொண்டு சென்றது, காஷ்மீர் பற்றி எரிய நேரு வைத்த நெருப்பு, உள் நாட்டு பிரச்னையை வெளி உலக பிரச்னையாக உருமாற்றியவர்  என்பதை மறந்து விட்டு ராகுல் காந்தி பிதற்றுகிறார்

                பாகிஸ்தான் படையெடுப்பின் போது, ஜம்முவில் உள்ள மீர்பூர் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதுமீர்பூர் பகுதியை மீட்க  ஜம்முவின் பிரிகேடியர் திரு.Paranjape  என்பவரிடம் பிரேம் சந்த் டோக்கராவும், போராசிரியர் பால்ராஜ் மாதோக்கும் வேண்டுகோள் விடுத்த போது, தங்களின் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன்ஆனால் உங்களுக்கு உதவ கூடிய சூழ்நிலையில் நான் இல்லை, ஏன் என்றால் ராணுவ உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றால் ஷேக் அப்துல்லாவிடம் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்க வேண்டும்  என்றார்ஆகவே முழுமையாக இந்தியாவுடன் இணைந்த பின்னரும் கூட அதிகாரம் ஷேக் அப்துல்லாவின் கைக்கு எவ்வாறு மாறியதுஇது நேரு செய்த தவறினால், காஷ்மீர் எரிகிறது.

         காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த பண்டிட்களை வெளியேற வைத்தது யார்?  19.1.1990ந் தேதி மசூதியில் கூடிய இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, பள்ளத்தாக்கில் உள்ள 3,50,000 பண்டிட்களை காலி செய்த செயலுக்கு இன்று வரை தீர்வு காண முயலவில்லைஆயிரக்கணக்கான பண்டிட்கள்  கொல்லப்பட்டார்கள்மத மாற்றம் செய்யப்பட்டார்கள், ஜம்முக்கு சென்றவர்களையும் துரத்தியடித்த கொடுமை நடந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் என்பதை ராகுல் காந்தி மறுப்பாரா ?

        1971 ஏப்ரல் மாதம் கிழக்கு பாகிஸ்தான் அவாமி லீக்க்கு ஆதரவாள போர்களம் கண்டு, பாகிஸ்தானை தோல்வியடைய செய்து, சுமார் 90,368 பேர்களை போர் கைதிகளாக இந்திய ராணுவத்தினர் கைது செய்தார்கள்இவர்களை விடுவிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என கூறியிருந்தால் ஆஸாத் காஷ்மீர் இன்று நம்முடன் இருந்திருக்கும்இதை திருமதி இந்திரா காந்தி ஏன் செய்யவில்லை.

        காஷ்மீர் பற்றி எரிய முக்கியமான காரணம் அரசியல் ஷரத்து 370 என்கின்ற அரக்கன்நாடு சுதந்திரம் பெற்ற போது, தனி சமஸ்தானங்களாக இருந்த அனைத்தையும், இந்திய அரசியல் சட்டத்தின் 238 வது பிரிவின்படி இணைத்து, மற்ற அனைத்து பகுதிகளையும் போலச் சமமாக்கிய போது, காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் பி அந்தஸ்து உள்ள மாநிலமாக நேருவே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது எதனால் ? ஏன்?

        உள்துறை அமைச்சர் பட்டேலுக்கு தெரியாமல், இலாக்க பொறுப்பில்லாத அமைச்சாரக இருந்த கோபல்சாமி ஐயங்காரிடம் கொடுத்து 370- உருவாக்கும் பொறுப்பை ஏன் கொடுத்தார்உருவாக்கப்பட்ட பின்னர் பட்டேலுக்கு தெரியாமல், நேரும் கோபல்சாமியும் இணைந்து சரிபார்த்து இறுதி செய்து இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் ஏன் கொடுத்தார்கள்அரசியல் சாசனத்தை உருவாக்கும் தலைமையில் இருந்த டாக்டர் அம்பேத்கர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது உண்மையாஅப்படி என்றால் ஏன் மந்திரி சபை கூட்டத்தில் இது பற்றி முழுமையான விவாதம் நடைபெறவில்லைகாஷ்மீரத் தனிச் சலுகையை வரைந்து முடிக்க அவருக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்இதில் இந்திய உள்துறை அமைச்சர் எந்த பங்கை வகிக்கும் தேவை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என இருமாப்பாகவும், சர்வாதிகாரமாகவும் நேரு நடந்து கொண்ட முறையினாலும் இன்று பற்றி எரிகிறது.

அரசியல்வாதிகளின் நிலைப்பாடு

        காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு அவ்வப்போது செவி சாய்க்கும் காரியங்களில் தேசிய மாநாட்டு கட்சியும்மக்கள் ஜனநாயக கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்கும் அவல நிலையே இன்று வரை தொடர்கிறதுபிரிவினைவாதிகளை ஒடுக்குவதற்கு பதிலாக, கோரிக்கையை ஏற்றுக் கொள்வதால், காஷ்மீர் பிரச்சனை இன்னும் தீர்வு கான முடியாமல் இருக்கிறது.   காஷ்மீர் சட்டசபையில் பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அப்சல் குரு தூக்கிலிட்டத்தை கண்டித்து சட்ட மன்றத்திற்குள் கோஷம் எழுப்பியவர்கள் இரண்டு கட்சியினரும்தேசிய மாநாட்டு கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்  லாங்கேட் அப்துல் ரஷீத் இந்தியாவிற்கு எதிராக கோஷத்தை எழுப்பியதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.    2010-ல் பாதுகாப்பு படையினர் மீதும், மாநில காவல் துறையினர் மீதும் கலககார்கள் நடத்திய கல்லெறி தாக்குதல் காரணமாகவும், பொது சொத்துக்களுக்கு தீ வைத்து நாசம் செய்தவர்களை கைது செய்து, வழக்கு  தொடுத்த போது. சில ஆண்டுகள் கழித்து, ஓமர் அப்துல்லா அரசு, கலககாரர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டதுஇம்மாதிரியான சம்பவங்கள் குறிப்பாக பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன.

        காஷ்மீர் அரசியல்வாதிகளும், நாடு முழுவதும் உள்ள மற்ற அரசியல்வாதிகளும், குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரியினர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகள் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்ஜம்முவில் உள்ள இந்துக்களை பற்றிய கவலை அவர்களுக்கு கிடையாது.   லட்சக்கணக்கான இந்து பண்டிட்கள் தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருப்பதை கண்டு கொள்ளதவர்கள் இவர்கள் என்பதையும் நினைத்து பாரக்க் வேண்டும்தனிநாடு கோஷத்தை அவ்வப்போது வைக்கும் கருணாநிதியும், வைகோவும் கூட பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக மத்திய அரசை குறை கூறும் போக்கிலேயே இருக்கிறார்கள்.

ஊடகங்களின் நிலைப்பாடு

        தினசரி மற்றும் தொலைக்காட்சிகள் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பற்றி எரிவது போல் சித்தரிக்கின்ற செயலை செவ்வனே செய்து வருகிறார்கள்.   பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டததை 2010 –ல் ஆரம்பித்து, நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த போது கூட, கலவரக்கார்களுக்கு ஆதரவாக களம் இறங்கியவர்கள் ஊடக பிரிவினர்ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லியின் சர்வதேச ஆய்வுகள் துறைப் பேராசிரியர்  ஹேப்பிமோன் ஜேக்கப் என்பவர் எழுதிய கட்டுரையில் , அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு பறிக்கக் கூடாது என்றும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என எழுதியுள்ளார்.   2010-ல் நடந்த சம்பவத்தை குறிப்பிடும் பொது, பாதுகாப்பு படையினர், போலீஸாரும் படு காயமடைந்ததையும், பலர் கொல்லப்பட்டத்தையும் குறிப்பிடாமல், 120 காஷ்மீரில் கொல்லப்பட்டதாக எழுதியது பாகிஸ்தானின் தூண்டுதலில் கலவரத்தை உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மனதில் பாதுகாப்பு படையினரைப் பற்றிய வெறுப்புணர்வை தூண்டுவதாக அமைகிறதுஇது போல் பல்வேறு இடதுசாரி அறிவுஜீவிகள் அரசுக்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பரப்புவதில் முதன்மையாக இருக்கிறார்கள்இந்த நிலை மாறப்பட வேண்டும்மேலும், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் கலவரங்கள் இல்லாத போதும், அந்த பகுதிகளிலும் கலவரம் இருப்பதாக சித்தரிப்பது கூட தேச இறையான்மைக்கு புறம்பான கருத்தாகும்

- ஈரோடு சரவணன்