காஷ்மீர் பிரச்னைக்கு நேருவே காரணம் - அமித் ஷா

காஷ்மீர் பிரச்னைக்கு நேருவே காரணம் - அமித் ஷா

காஷ்மீர் பிரச்னை நீடிப்பதற்கு, நேரு ஒருவரே காரணமாவார். காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கும் நேருதான் காரணம். அக்காலக்கட்டத்தில் படேல், நாட்டின் பிரதமராக இருந்திருக்கும்பட்சத்தில், காஷ்மீர் விவகாரம் பிரச்னையாகிருக்காது. ஹைதராபாத் விவகாரத்தை சர்தார் வல்லபபாய் படேல் (மறைந்த மத்திய உள்துறை அமைச்சர்) கையாண்டார். அதனால் அப்பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. அதேநேரத்தில் காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டார். அது தற்போதும் பிரச்னையாக நீடிக்கிறது. 

ராணுவ வீரர்களின் ரத்தத்துடன் மோடி வியாபாரம் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்து, பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் நட்பு பாராட்டுகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவர், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோது, அதற்காக அழுகிறார்.

மோடியை அகற்றுவதற்காக பயங்கரவாத விவகாரத்தை கூட காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேசப் பாதுகாப்புக்குதான் முதல் முன்னுரிமை கொடுக்கிறார். இதற்காக நாளொன்றுக்கு 18 மணி நேரம், அவர் உழைக்கிறார். பாஜகவுக்கு தேசப்பக்தி குறித்து காங்கிரஸ் பாடம் சொல்லி கொடுக்க தேவையில்லை. பாரத மாதாவுக்காக உயிர் தியாகம் செய்ய பாஜகவினர் எப்போதும் தயாராக இருக்கின்றனர் என்றார் அமித் ஷா.