கிமு, கிபி முறை மூலமாக சரியாக வரலாற்று நிகழ்வுகளை கணக்கிட வில்லை

கிமு, கிபி முறை மூலமாக சரியாக வரலாற்று நிகழ்வுகளை கணக்கிட வில்லை

கிமு, கிபி எல்லாம் அந்தக் காலம். கிமு, கிபி எனும் கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் டியானிஷிஷ் இவர் 525 ஆண்டு இதை அறிமுகப்படுத்தினாலும் இதை பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே மக்கள் பயன்படுத்த தொடங்கினர். எனினும் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் இக்கணக்கிடும் முறையை எதிர்த்தே வந்துள்ளனர் ஏனெனில் கிமு, கிபி முறை சரியாக வரலாற்று நிகழ்வுகளை கணக்கிட வில்லை மற்றும் மதசார்பற்றவர்களுக்கு மதத்தின் பெயர் கொண்டு அதற்கு சம்பந்தமே இல்லாத அனைத்து வரலாற்று நிகழ்வுகளை தொடர்புபடுத்துவது பிடிக்கவில்லை. இதற்கு மாற்றாக மக்களின் ஆண்டு எனப்படும் பொது ஆண்டு முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பயன்படுத்த தொடங்கினர் வரலாற்று அறிஞர்கள். கடந்த ஆண்டு பள்ளி பாடப்புத்தகத்தில் பொது ஆண்டு முறையை அறிமுகப்படுத்தினர். ஆனால் மத சார்பின்மை பேசும் கட்சியினரை அதை எதிர்த்தனர். ஐநா முன்னாள் தலைவர் கோபி அன்னான் இது மாற்றத்திற்கான நேரம் இனி நாம் பொது ஆண்டு முறையைதான் பயன்படுத்த வேண்டும் என கூறி உள்ளார்.