கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும் "நகர்புற நக்சல்கள்" பிரதமர் தாக்கு

கிராமப்புற இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும் "நகர்புற நக்சல்கள்" பிரதமர் தாக்கு

"நகர்புற நக்சல்கள்" ஏசி அறைகளில் வசிக்கின்றனர், கார்களில் வலம்வருகின்றனர். ஆனால், கிராமப்புற இளைஞர்களை ரிமோட் கண்ட்ரோலில் ஆட்டி வைத்து அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கின்றனர்",என்று  கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி.

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் தேர்தல் பேரணியை துவக்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் நகர்புற நக்சல்களின் பேச்சை கேட்டு ஆதிவாசி இளைஞர்கள் வாழ்க்கை வீணாவதாக கூறினார். அப்படியிருக்க காங்கிரஸ் நகர்புற நக்சல்களை ஆதரிப்பது ஏன் ?என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரு புறம் நக்சல்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டே இன்னொரு புறம் மாவோயிஸ்டுகளை ஒழிப்போம் என்று காங்கிரஸ் கூறிவருவது இரட்டை வேடம். எனவே, மக்கள் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். நக்சல்கள் தங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் அதை வீதிக்கு கொண்டு வருகிறார்கள். என்று அவர் கூறினார்.