கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்

மராத்திய எழுத்தாளரான, ரமேஷ் டெண்டுல்கரின் மகனாக, 1973, ஏப்., 24ல், மும்பையில் பிறந்தார். தன், 16வது வயதில், பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் துவக்கினார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில், 73 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்; 18 முறை, தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஒரு நாள் போட்டிகளில், 18 ஆயிரம் ரன்கள்; 200 டெஸ்ட் போட்டிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், சர்வதேச போட்டிகளில், 100 சதம் என, ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். 2010-ல் நடந்த, ஒரு நாள் போட்டியில், ஆட்டமிழக்காமல், 200 ரன்களைக் குவித்து, புதிய சாதனை படைத்தார்.

ராஜ்யசபா, எம்.பி.,யாக, 2012-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரத ரத்னா, பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜிவ்காந்தி கேல் ரத்னா என, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து, 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர், 2012ல் ஓய்வு பெற்றார்.'துாய்மை இந்தியா' துாதர், குடிசைவாழ் மக்கள் நலவாழ்வு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகிய சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.'லிட்டில் மாஸ்டர்' சச்சின் பிறந்த தினம் இன்று!