கிரிமினல் வேட்பாளர்கள் - தி.மு.க. முதலிடம்

கிரிமினல் வேட்பாளர்கள் - தி.மு.க. முதலிடம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களத்தில் உள்ள, லோக்சபா தேர்தல் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகள் அதிகம் உள்ளவர்கள் வரிசையில், தி.மு.க., முதலிடம் பிடித்துள்ளது.  

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில், 819 மனுக்களை ஆய்வு செய்து, குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு சார்ந்த முடிவுகளை, ஏ.டி.ஆர்., என்ற, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 101 வேட்பாளர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில், 67 பேர் மீது, அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிகபட்சமாக, தி.மு.க., வேட்பாளர்களில், 11 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில், ஏழு பேர் மீது, அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

அவர்கள் யார் யார்? தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், துாத்துக்குடி - கனிமொழி, நீலகிரி - ஆ. ராஜா, கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி, மத்திய சென்னை - தயாநிதிமாறன், தென்காசி - தனுஷ் எம்.குமார், சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன், நெல்லை - ஞானதிரவியம், பெரம்பலுார் - பாரிவேந்தர், தருமபுரி - எஸ்.செந்தில்குமார், வேலுார் - டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.