கிரேஸி மோகன் காலமானார்

கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியர், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார். கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை 1979-ல் தொடங்கி அதன் வாயிலாக பல காமெடி நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். பல திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி அசத்தியுள்ளார். பஞ்சதந்திரம் பம்மல் கே சம்பந்தம் போன்ற பல கமலஹாசன் நகைச்சுவைப் படங்களுக்கு கிரேசி மோகனின் வசனங்கள் பலமாக அமைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.