கிறிஸ்டியன் மைக்கேலை தொடர்ந்து விஜய் மல்லையா

கிறிஸ்டியன் மைக்கேலை தொடர்ந்து விஜய் மல்லையா

3,600 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கின் முக்கிய நபரான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று இரவு இந்தியா கொண்டு வரப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, 9000 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவையும் இந்தியாவிற்கு கொண்டு வர சட்டபூர்வமான  முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் விஜய் மல்லையா எதிர்பாராதவிதமாக விமான நிறுவனம் நஷ்டமடைந்து விட்டதாகவும் அதனால் தான் தன்னால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் எனினும் தன் நிறுவனம் வாங்கியுள்ள கடனை 100% திருப்பி செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். தனது இந்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.