கிறிஸ்தவ மத போதகர் உட்பட 16 பேர்  குற்றவாளிகள்

கிறிஸ்தவ மத போதகர் உட்பட 16 பேர் குற்றவாளிகள்

கடலூர் திட்டக்குடியில் கடந்த 2014ம் ஆண்டு  காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுமிகள் பலரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் தப்பி வந்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் விபசாரத்தில் தள்ளப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து இரண்டு சிறுமிகளும் மீட்கப்பட்டு சென்னையில் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.   இது தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் அருள் தாஸ் உட்பட 17 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கு கடலூர் மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இரண்டு சிறுமிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினர். ஆனால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று கடலூர் மகளீர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றினர்.

இரண்டு சிறுமிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் நீதிபதி லிங்கேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை தவிர மற்ற 16 பேரும் மதபோதகர் அருள் தாஸ் உட்பட குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரம் வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வப்ரியா ஆஜரானார்.