கிறிஸ்துவ மிஷனரிகளும்  மாவோயிஸ்ட்களும்  - பகுதி 1

கிறிஸ்துவ மிஷனரிகளும் மாவோயிஸ்ட்களும் - பகுதி 1

 பாரத தேசத்தின் இறையான்மைக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் மூன்று விதமான சக்திகள் செயல்படுகின்றன. சீனச் சார்ப்புடைய மாவோயிஸ்ட்கள், இரண்டாவது மேற்கத்திய நாடுகளின் பிடியில் உள்ள கிறிஸ்துவ மத மாற்ற சக்திகள், மூன்றாவது உலகத்தை இஸ்லாம் மயமாக்க பயங்கரவாத செயல்களை புரியும் இஸ்லாமிய ஜிகாதிகள்.    இந்தியாவில் பணியாற்றும்  கிறிஸ்துவ மிஷனரிகள் , பயங்கரவாத செயல்பாடுகளுடன்  வன்முறையில் நம்பிக்கை கொண்ட மாவோயிஸ்ட்களுடன் கைகோர்ததுக் கொண்டு செயல்படுகின்றன.  மாவோயிஸ்ட் கொரில்லாக்களுக்கு, அமெரிக்க கிறிஸ்துவ மிஷனரிகள் கை கோர்த்துக் கொண்டு, தேவையான உதவிகளை செய்கிறார்கள்.   ஆட்சி  அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி இக் கூட்டினை உருவாக்கியதாக கூறப்படுகிறது.   நாகலாந்து கிறிஸ்துவர்களுக்கான மாநிலம் என பகிரங்கமாகவே அறிவித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.  இதை மையப்படுத்தியே கிறிஸ்துவ மிஷனரிகளும், மாவோயிஸ்ட்களும் கூட்டாக பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.  பல்வேறு ஆதராங்களின் அடிப்படையில் உலக கிறிஸ்துவ அமைப்புகள் வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் நடக்கின்ற பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகவும், பயங்கரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

      2009-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 23ந் தேதி ஓடிஸா மாநிலத்தில் கன்டமால் மாவட்டத்தில் லஷ்மாணந்த சரஸ்வதி சுவாமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  மாவோயிஸ்ட் மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் கூட்டுச் சதி இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.   சுவாமிகளை கொலை செய்வதற்கு திட்டமிட்ட கிறிஸ்துவ   பிரிவினருக்கு, பயிற்சி அளித்தவர்கள் மாவோயிஸ்ட்கள்.   சுவாமி கொல்லப்பட்டு சில தினங்கள் கழித்து, மாவோயிஸ்ட் அமைப்பின் ஓடீசா மாநிலத்தின் செயலாளர் சுனில் என்கின்ற சபாயசி பாண்டே,  மாற்று மதத்தினருக்கு எதிராக குறிப்பாக கிறிஸ்துவ மத மாற்ற பிரச்சாரம் செய்தவர்களை தடுத்து, இந்து மத பிரச்சாரம் செய்த  காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டார் என கூறினார்.  சில நூறு கிறிஸ்துவ மாவோயிஸ்ட் கொரில்லாக்கல் போதும் ஒரிஸாவின் அதிகாரத்தை மாற்றிவிடலாம் என விஷால் மங்கல்வாதி என்ற மாவோயிஸ்ட் சிந்தனை கொண்ட கிறிஸ்துவ மத போதகர்  வெளிப்படையாக பேசியுள்ளார்.

      கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கம் பல அடிப்படை கருத்துக்களில் ஒற்றுமையுள்ளது.  இரண்டு அமைப்புகளும்   இந்துத்துவாவை எதிர்ப்பதும்,  நாடு என்ற கருத்துக்கு எதிராக பேசுவதும்,  ஒரே நாடு என்ற கருத்திற்கு எதிராக இரண்டு அமைப்புகளுமே பிரச்சாரத்தை செய்கிறார்கள்.  காஷ்மீர் பிரிவினைவாதிகளும் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரிவினைவாதிகளை அடக்க வேண்டும் ஓரே நாடு பாரத நாடு விளங்க வேண்டும் என்ற சிந்தனைக்கு எதிராக மிஷனரிகளும், மாவோயிஸ்ட்களும் தங்களது திட்டங்களை வகுக்கிறார்கள்.  பல பிரிவினைவாதிகளின் கோரிக்கையான தன்னாட்சி உரிமை மற்றும் எங்களது உரிமைகளை நாங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் என்ற சித்தாந்திற்கு உறுதுணையாக இருக்கின்ற அமைப்புகள் மாவோயிஸ்ட் மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகள்.

      இதுவரை மாவோயிஸ்ட்கள் எந்த கிறிஸ்துவரையும் கொலை செய்யவில்லை. சர்சசுக்கு எதிராக போராட்ட களத்தை அமைக்கவில்லை.  சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன்  மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட போது, முன்னாள் ஐ.பி.யின் தலைவர் , மாவோயிஸ்ட்கள் ஆட்சியரை கொலை செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அவர் ஒரு கிறிஸ்துவர், அரசை பணிய வைக்க எடுத்த தந்திரம் இது என்றார்.   கிறிஸ்துவ சர்ச்கள் மீது மாவோயிஸ்ட்களுக்கு பாசம் உள்ளது என்று,  2009 மே மாதம் கொச்சியில் பிஷப் செராங் என்பவர், பேசியுள்ளார்.  இவரைப் போலவே, ஹசாரிபாக் பிஷப் சார்லஸ் சொராங்,  சமுதாய கொடுமைகளை எதிர்த்து மாவோயிஸ்ட்களும், சர்ச்களும் கூட்டாக சேர்ந்து போராடுகிறார்கள், மற்றவர்களை விட மாவோயிஸ்ட்கள் மேன்மையானவர்கள்  என்றார்.   குஜராத்தில் மாவோயிஸ்ட் தொடர்புடைய மூன்று அரசியல் இயக்கவாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவர்கள் என்பதால், உடனடியாக ஏசு சபைப் பாதிரிகள் கடும் கண்டனம் செய்தனர்.   கைதுக்கு பின்னால் மாவோயிஸ்ட்களுக்கும், கிறிஸ்துவ பாதிரிகளுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வர துவங்கின.   நாடு முழுவதும் ஏசு சபை இயக்கவாதிகள் மாவோயிஸ ஆயுதக் கிளர்ச்சியின் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள்.   பிரச்சாரத்திலும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கிறிஸ்துவ மிஷனரிகள் எடுத்துள்ளன.  இந்திய சமூக மையத்தின் முன்னாள் இயக்குநர் , புனித ஜோசப் கல்லூரியின் முதல்வர் ஆம்ப்ரோஸ் பிண்டோ, மாவோயிஸ்ட்களின் ஊடக ஆதரவாளர். 

      கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நன்கொடையில் ஒரு பகுதி மாவோயிஸ்ட்களுக்கு வழங்கப்படுகிறது.   வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியைக் கொண்டு மலைவாழ் மக்கள் மத்தியில் தொண்டு காரியங்களை செய்யும் போது நக்ஸல் ஆதரவு பிரச்சாரமும் நடைபெறுகிறது.  நக்ஸல்களுக்கு ஆதரவாக சில செயல்பாடுகளிலும் கிறிஸ்துவ மிஷனரிகள் ஈடுபடுகின்றன.   இவ்வாறு செயலாற்றும் தொண்டு நிறுவனம் ஆதிவாசி மகா சபா என்ற பெயரில் செயல்படுகிறது.  பிகார் மாநிலம் ஜான்பாத் நகரில் உள்ள பாஸ்டர் ரோஷன் என்பவர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிலிருந்தது, ஆதரத்துடன் தெரிய வந்தவுடன், கைது செய்யப்பட்டார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து ரூ310 கோடி வந்துள்ளதாகவும், மேற்படி நிதியில் ஒரு பகுதி மாநில மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டதாகவும் ஜார்கண்ட் மாநில காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

      இந்தியாவில் செயல்படும் லுத்தரன் சபைகள் மாவோயிஸ்ட் பிரிவுகளுக்கும் நிதி உதவி செய்து வளர்த்து வருகின்றன.  1980-ல் கம்யூனிஸ்ட்கள் ஒருவரை ஒருவர் லுத்தரன் சபைகளிடமிருந்து நிதி உதவி பெறுவதாகக் குற்றம் சாட்டிக் கொண்ட போது இந்த விஷயம் வெளிப்படையாகத் தெரியவந்தது.  இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளிப்படையாகவே, இந்திய மாவோயிஸ்ட்கள் வெளிநாட்டுத் தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் உறவுகள் ஏற்படுத்திக் கொண்டு, மேற்கத்திய பொருளாதார கொள்கையின் மூலமாக இந்தியக் கிளையால் இயக்கப்படுகிறார்கள்.   மாவோயிஸ்ட் தலைவர்கள் , சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் சிலர் லுத்தரன் சபை மூலம் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

-ஈரோடு சரவணன்