கிறிஸ்துவ மிஷனரிகளும்  மாவோயிஸ்ட்களும்  - பகுதி 2

கிறிஸ்துவ மிஷனரிகளும் மாவோயிஸ்ட்களும் - பகுதி 2

நாகலாந்து மாநில அரசியல் நிலவரத்தில் கிறிஸ்துவ மாவோயிஸ்ட்களின் கூட்டு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.  நாகலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற பிரிவினைவாத அமைப்பு உருவாக்கப்பட்டது.  இந்த அமைப்பின் பிரகடனத்தில், எங்கள் மக்களின் மீட்பு சோஷலிசத்திலும், எங்களது ஆன்மீக மீட்பு கிறிஸ்துவிலும் உள்ளது.  நாகலாந்து ஏசுவுக்கே,  நாகலாந்தை அமைதியான முறையில் காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை பொய்யானது.  ஆயுதங்கள் --- ஆயுதங்கள் மட்டுமே எங்கள் நாட்டை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.  மேற்படி கவுன்சில் அமைப்பில் வனவாசி கிறிஸ்துவ அடையாளத்தை ஏற்படுத்தி , நாகலாந்தின் பூர்வீகப் பண்பாட்டை அழித்தல்,  இதற்காக மாவோயிஸ்ட் கிறிஸ்துவ கோஷம் கிறிஸ்துவுக்காக சோஷலிஸ நாகலாந்து.  இதற்கு முன் எடுக்கும் முயற்சி வன்முறைக் கிளர்ச்சியாகும்.  இதற்கு ஆதரவாக உலக கிறிஸ்துவச் சபைகளின் பேரவை நாகாலாந்தின் பிரிவினைவாதத்தை சர்வதேச அரங்குகளில் ஆதரித்து வருகிறது.   அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பாப்டிஸ்ட் சபையே, நாகா சமுதாயத்தைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது.

      மாவோயிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரிகளின் உறவு நேபாளத்திலிருந்து ஒரிசா வரை பின்னிபிணைந்திருக்கிறது.  இந்த கூட்டானது, நேபாளத்திலிருந்து ஒரிசா வரை உள்ள குறிப்பாக கனிம வளங்கள் நிறைந்த மலைப்பகுதி மக்களிடம் கொண்டு செல்கிறது.  கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் உள்ள வனவாசிகள் பகுதிகளில் பிரச்சாரமும், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இணைந்து செயல்படுகிறார்கள்.  இதற்கு எதிரியாக யாராக இருந்தாலும்  அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.  கந்தமால் மாவட்டத்தில் நடந்த லஷ்மணாந்த சரஸ்வதி சுவாமிகள் கொல்லப்பட்ட  சம்பவம்.   இதுபற்றி விஷால் மங்கல்வாதி பெருமையுடன் குறிப்பிடுவது, வனவாசி வழிபாட்டு முறைகளுக்கும், இந்துமதத்துக்கும் எதிராக போர் தொடுப்பதுடன்,  மாவோயிஸ்ட்கள் கிறிஸ்துவ மத பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரித்தும் வருகிறார்கள்.  நெடுஞ்சாலையில் உள்ள் கிராமங்களுக்கு மாவோயிஸ்ட்களே கிறிஸ்துவ ஊழியர்களை அழைத்து சென்று மத பிரச்சாரம் செய்யுவும், காவல் துறையினரின் எச்சரிக்கை வருமானால், அரணாகவும் இருக்கிறார்கள் என்றார்.

      இந்திய அரசு மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடத்திய ஆயுதத் தாக்குதலை எதிர்த்து , ஆம்புரோஸ் பிண்டோ எழுதிய  ஏன் நாங்கள் பச்சை வேட்டையை  எதிர்க்கிறோம்    ( Why We Oppose Green Hunt )  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையே, மறைமுகமாக மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரை,  முதன் முதலில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான மெயின்ஸ்ட்ரீம்ல் வெளியானது.  இதை தொடர்ந்து மேற்படி கட்டுரையை சமூக செயல்பாட்டுக்கான ஏசு சபையினர் தங்களது இணையத் தளத்தில் வெளியிட்டார்கள்.  மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக இயங்குவது ஏசு சபையாகும்.  ஏசு சபை ஜராத்தில் சேவியர் மஞ்ஞரான் என்பவரால் நடத்தப்படுகிறது.  இவர் நடத்தும் குஜராத் ஆதிவாசி மகாசபை எனும் அமைப்பு, இந்திய அரசு மாவோயிஸ்ட்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கிறது. 

      துத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய விதத்தில் கூட மாவோயிஸ்ட் பாதிரியார்களின் கூட்டு வெளிச்சத்திற்கு வந்தது.  போராட்ட களத்தில் முதன்மையாக இருந்த அமைப்பு மாவோயிஸ்ட் அமைப்பான மக்கள் நீதி மன்றம் என்பதாகும்.  இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் கிறிஸ்துவ பாதிரியார்கள்.  தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள், கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்தததின் காரணமாக, மாநிலத்தில் பல பகுதிகளில் கிறிஸ்துவ ஆதிக்கம் ஏற்பட்டது.  இதன் காரணமாக மாநில அரசு அல்லது மைய அரசு கொண்டு வரும் திட்டங்களை தடுப்பதற்காகவே, மாவோயிஸ்ட் ஆதரவு தளத்தை வேறு பெயர்களில் உருவாக்கியுள்ளார்கள்.  இந்த தளத்திற்கு பங்கு தந்தைகளும் வேறு வழிகளில் உதவி புரிகிறார்கள்.  மாநிலத்தில் உள்ள பல கிறிஸ்துவ ஆலயங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளை வகுக்கும் இடத்தில் கூட இருக்கிறார்கள்.   ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்திய போராட்டங்களை போலவே, அனல் மின் நிலை எதிர்ப்பு, சென்னை சேலம் 8வழி சாலை திட்டம், நியூட்ரேனோ போன்ற போராட்டங்களின் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்கும், இதற்கு உடந்தையாக மாவோயிஸ்ட்களும் உள்ளார்கள்.  இந்த விபரீத கூட்டு, தேசத்தின் இறையான்மைக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-ஈரோடு சரவணன்