"கிலி பரப்பினா களி"

"கிலி பரப்பினா களி"

தேசத்திற்கு விரோதமாகவோ, ஆபாசமாகவோ, வன்முறை தூண்டுவிதமாக பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்சப் , பேஸ்புக், ட்விட்டர் போன்றவைகள் மூலம் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தேசத்திற்கு விரோதமான கருத்துக்கள், ஆபாசமான கருத்துக்கள் தொடர்ந்து சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் பதட்டத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள்.

இந்த வதந்திகளை பலர் அப்பாவிகள் நம்பிவிடுகிறார்கள். சமுதாயத்தில் வெறுப்புணர்வு ஏற்பட இதுபோன்ற பதிவுகள் காரணமாகின்றன, சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகிறது.

இதை தடுக்கும் பொருட்டு, காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. குறுந்செய்தி மூலம் அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் "வதந்திகள், ஆபாசம், வன்முறை பதிவுகளை வாட்டசாப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட எந்தவித சமூக ஊடகங்களிலும் பதிவிட வேண்டாம் எனவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது".