"குஜ்ஜார் சமூகத்தினர் தொடர் போராட்டம்"

"குஜ்ஜார் சமூகத்தினர் தொடர் போராட்டம்"

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது.  இதனிடையே, குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லாவுடன் மாநில அரசு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாததை அடுத்து, இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கிரோரி சிங் அறிவித்தார்.   

இந்நிலையில், வாய் மாதோபூர் மாவட்டத்தில் நடக்கும் போராட்டங்கள் காரணமாக 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, 2 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.