குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை - ஸ்டாலின் பரிதாபங்கள்

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை - ஸ்டாலின் பரிதாபங்கள்

தேமுதிக தலைவர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்துவிட்டு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிறார். திருநாவுக்கரசரும் சந்தித்து, மரியாதை நிமித்தம் தான், ஆனால் அரசியல் பேசினோம் என்று வெளிப்படையாக சொன்னார்.

ஸ்டாலினும் வந்து சந்தித்து விட்டு, மரியாதை நிமித்தம் தான் சந்தித்தோம், ஆனால் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார். ஒரு நிருபர் தேமுதிக, திமுக கூட்டணிக்கு வருமா என கேட்க "உங்கள் எண்ணத்திற்கு நன்றி" என்று மற்றும் கூறி விடைபெற்றார். அதே போல காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட அன்று "தேமுதிக வுடன் பேசவில்லை" என்று பொட்டென்று சொன்னார் ஸ்டாலின்"

மறுபுறம் அதிமுக "தேமுதிக வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறோம், அவர்கள் வந்தால் மகிழ்ச்சி" என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள். 

நேற்று பேசிய பிரேமலதா "ஸ்டாலின் அரசியல் கூட்டணி குறித்து பேசினார்" என்று பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார்.

கலைஞர் இருந்தவரை, நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சியே, அறிவாலயம் வந்து பேச்சு நடத்தும். சிறிய கட்சிகளும் அப்படியே.  

அதிமுகவிலும் போயஸ் தோட்டத்திற்கு தான் பிற கட்சி தலைவர்கள் வருவார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் வேண்டுமானால், சிறிய கட்சிகளின் அலுவலத்திற்கு செல்வார்கள்.  ஆனால் கலைஞரோ, ஜெயாவோ எவர் வீட்டுக்கும் சென்றதில்லை.  

ஸ்டாலின், விஜயகாந்த் வீடு தேடி சென்று கூட்டணி பேசி, மீண்டும் மீண்டும் சொதப்புவதாக கட்சி தொண்டர்களே பேசுகின்றனர்.  அதுவும் நான் அரசியல் பேசவில்லை என்று கூறி ஸ்டாலின், மாட்டிக்கொண்டது "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பதையே காட்டுவதாக கருதுகின்றனர்.