குமரியிலே கோவில் கொள்ளும் கோவிந்தன்

குமரியிலே கோவில் கொள்ளும் கோவிந்தன்

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்யாகுமரியில் விவேகாந்தா கேந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த கோவிலில் 7அடி உயர வெங்கடாசலபதி சுவாமி சிலை மற்றும் 3 அடி உயரம் கொண்ட பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மேலும் ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார், ஆண்டாள் முதலிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.   

இந்த கோவில் அமைப்பதற்கு விவேகானந்தா கேந்திரம் 5.50 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. ரூ.22.50 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. திருப்பதியில் பிரம்மோத்சவம், தேரோட்டம், தெப்பம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறும் அதே நேரத்தில் இங்கும் அந்த விழாக்கள் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த தலம் தெற்கே ஒரு திருப்பதியாகவே திகழும்.  பிரம்மோத்சவ நாளில் சூரிய ஒளி பெருமாளின் பாதத்தில் விழுமாறு கோவில் வடிவமைக்கப்ப்ட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.