கும்பமேளாவிற்கு தயாராக பிரயாக் ராஜ்

கும்பமேளாவிற்கு தயாராக பிரயாக் ராஜ்

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நாளை கும்ப மேளா திருவிழா துவங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை உத்திர பிரதேச அரசு செய்துள்ளது. கும்ப மேளாவிற்காக உத்திரப்ரதேச அரசு ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சுமார் 12 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இன்று  மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரயாக் ராஜின் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

"இந்த பூமியிலேயே அமைதியாக பக்தர்கள் சங்கமிக்கும் நிகழ்வு" என்று யுனஸ்கோவால் பாராட்டப்பட்டது கும்பமேளா என்பது குறிப்பிடத்தக்கது.