கும்பமேளாவில் மொரிஷியஸ் பிரதமர்

கும்பமேளாவில் மொரிஷியஸ் பிரதமர்

உத்திரபிரதேச மாநிலம் பிர்யாக் ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இன்று கலந்து கொள்கிறார். அவருடன் வாரணாசியில் நேற்று முடிந்த 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள  வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். அங்கு அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கா பூஜை முதலிய சடங்குகளை செய்ய உள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கலை பண்பாட்டு கிராமங்களை காண செல்கின்றனர். இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவர்களின் கலை பண்பாட்டுடன் இணைத்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.