கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது

கும்பமேளா இன்றுடன் நிறைவடைகிறது

உத்தர பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்பமேளா, மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இங்குள்ள திரிவேணி சங்கமத்தில், ஒருகோடிபேர், இன்று புனித நீராடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி, 15ல், மகர சங்கராந்தியில் துவங்கிய இந்த கும்பமேளா, மகா சிவராத்திரியான இன்றுடன் முடிகிறது. மொத்தம், 55 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவில், இதுவரை, 22 கோடிபேர் புனித நீராடியுள்ளனர்.

உலகிலேயே, அதிக அளவில் மக்கள் கூடும் மிக பிரம்மாண்ட மத நிகழ்வாக, கும்பமேளா கருதப்படுகிறது. கடந்த, 2013ல் நடந்த கும்பமேளாவில், 12 கோடி பேர் பங்கேற்றது சாதனையாகும். இந்த நிலையில், இந்தாண்டு நடக்கும் கும்பமேளாவில், இதுவரை, 22 கோடி பேர் பங்கேற்று, புனித நீராடியுள்ளனர்.

மகா சிவராத்திரியான இன்றுடன் இந்த கும்பமேளா நிறைவடைகிறது. இதில், இன்று மட்டும் ஒரு கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை, மாநில அரசு செய்துள்ளது. பக்தர்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் ரயில்கள், பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் அடுத்த கும்பமேளா, 2025ல் நடக்க உள்ளது.