கும்ப மேளாவில் குடியரசு தலைவர்

கும்ப மேளாவில் குடியரசு தலைவர்

உலக பிரசித்தி பெற்ற கும்பமேளா உத்திர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். பின்னர், அவர் மடாதிபதிகளையும், சாதுக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். அதன் பின்னர் அவர் பரத்வாஜ மகரிஷியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

அராலியில் பரமார்த்த நிகேதன் சார்பில் நடைபெற உள்ள விஸ்வ சாந்தி யாகத்திலும் அவர் பங்கு கொள்வார். பின்னர் அவர் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி நடக்க உள்ள 2 நாள்  காந்திய எழுச்சி உச்சி மாநாட்டையும் துவக்கி வைக்கிறார். .