குயில் பாட்டு தந்த  முண்டாசு  பாரதி !

குயில் பாட்டு தந்த முண்டாசு பாரதி !

சுப்பிரமணிய பாரதியார் இந்திய சுதந்திர போராட்ட வீரர். சுதந்திர போராட்ட காலத்தில் அவரது கவிதைகள் சிங்கம் போல் கர்ஜித்தன, தன் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

பாரதியார் வெறும் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.


1882 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமிக்கும் , இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக  பிறந்தார். பெற்றோர் இவருக்கு  இட்ட பெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அவருக்கு தமிழ் மொழி மீது மாற பற்றும், தீரா புலமையும் இருந்தது.

ஏழு வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.  


பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார்.

1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற கவிதைகள் பாரதியாரால் இயற்றத்தப்பட்டன. 


முண்டாசு கட்டிய ‘மீசை கவிஞன்’ என்று உலகம் போற்றும் சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினம் இன்று.


- ஆனந்த் T பிரசாத்