குர்ஜார் இடஒதுக்கீடு போராட்ட தலைவர் பா.ஜ.க -வில் இணைந்தார்

குர்ஜார் இடஒதுக்கீடு போராட்ட தலைவர் பா.ஜ.க -வில் இணைந்தார்

குர்ஜார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா, அவருடைய மகன் விஜய் பைன்ஸ்லா ஆகியோர் நேற்று பா.ஜனதாவில் டெல்லி பா.ஜனதா தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானுக்கான பா.ஜனதா பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர்.

பிரதமர் மோடியின் பணியாற்றும் திறன் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர் சாமானிய மக்களுடன் வெகு இயல்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்கிறார். நமது நாட்டில் இப்போது மிகச் சிறந்த தலைவராக மோடி உள்ளார். எனவே, பாஜகவில் இணைய முடிவு செய்தேன்.கிரோரி சிங்கின் வரவு ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. 

 காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளின் கொள்கைகளையும் ஆய்வு செய்த பிறகு இம்முடிவை எடுத்துள்ளேன்’’ என்று என்று கிரோரி சிங் கூறினார்.