குற்றசாட்டு

குற்றசாட்டு

மாநிலத்தின் மொத்த வருவாயில் 61 % அளவிற்கு அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாகவும் , பென்ஷன் , போனஸாகவும் கொடுக்கும் மிக நல்ல அரசு உலகத்திலேயே நமது தமிழக அரசு தான். 61 % அளவிற்கு வருவாயை வெறும் 2 % அரசு ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டு - மீதம் மக்கள் 7 .5 கோடி பேர் நலத்திட்டத்திற்கு மீதம் இருக்கும் 39 % வருவாயை ஒதுக்குவது எவ்வளவு பெரிய நிர்வாக திறமை? 

ஆனாலும் வருமானம் எங்களுக்கு போதவில்லை இன்னும் அதிகம் சம்பளம் கொடுங்கள் என்று கேட்டு போராட்டம் நடத்தத் திட்டமிடும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் சங்கங்கள் , அரசு ஆசிரியர் சங்கங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா ? 

இதற்கெல்லாம் யார் காரணம் ? வேறு யாரும் இல்லை திமுக தான் காரணம். 

திமுகவை  ஆட்சிக்குக் கொண்டுவருவதை எதிர்பார்த்து ஆசையாகக் காத்திருக்கிறார்கள் அரசு ஊழியர்கள் எதனால் என்பது உலகம் அறிந்த உண்மை. இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் . " நான் நாட்டைக் கொள்ளை அடிக்கிறேன் , நாட்டின் வருமானத்தை நீ கொள்ளை அடித்துக் கொள். " என்று ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் வாழும் கூட்டணி. 

மக்கள் மீண்டும் ஒருமுறை திமுக என்ற கட்சிக்கு வாக்களித்தால் இன்று 61 % வருவாய் அரசு ஊழியர்களுக்குச் செல்கிறது என்றால் நாளை 80 % வருவாயை அவர்களிடம் கொடுத்துவிட்டு மக்களை முழு பிச்சைக்காரர்களாக மாற்றுவார்கள். 

படித்த வேலை தேடும் இளையவர்கள் அனைவரும் நன்கு கவனிக்க : 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழக அரசை மிரட்டி போராட்டம் நடத்திக் கூடுதல் சம்பளம் பெற்றனர். அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 14,719 கோடி கூடுதல் செலவு ஆகும். கொஞ்சம் யோசிங்க இந்த 15000 கோடி வைத்து ஆண்டுக்கு 3 லட்சம் வேலை தேடும்  இளையவர்களுக்குச் சுயதொழில் செய்ய லோன் கொடுக்கலாம் அல்லவா?   அப்படி என்றால் அடுத்த 5 வருடத்தில் தமிழகத்தில் 15 லட்சம் புதிய தொழில்முனைவோரை உருவாக்க முடியும்.  அதன் மூலம் ஒருவர் சராசரியாக 5 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினாலும் சுமார் 50 லட்சம் மேல் வேலை வாய்ப்பை உருவாக்கிட முடியும் இங்கே. சரி தானே? 

வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடும் இங்கே 15000 கோடியை இப்படி செலவு செய்வது நியாயமா ?  இல்லை அப்படியே தூக்கி அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வாகப் போடுவது நியாயமா?  கொஞ்சம் சிந்தியுங்கள் இப்போது என்ன அரசு ஆசிரியர்கள் நடுத்தெருவிலா வாழ்கிறார்கள்?   இந்த நிலைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள் ?   யாரும் இல்லை,  நமது திமுக தான் காரணம்.   அவர்கள் தான் அரசு ஊழியர்களைப் போராட்டம் செய்யத் தூண்டுவது. சம்பளம் இந்த அளவுக்கு உயர்ந்துவிடக் காரணமும் அவர்கள் தான். அரசு ஊழியர்களுக்கு அடிபணியாத ஒரு நிர்வாக திறமையுள்ள அரசை நாம் தேர்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லை என்றால்  நிலைமை இன்னும் மோசம் அடையும். திமுக போன்ற கட்சிகளைத் தீவிரமாக விரட்டி அடிக்க வேண்டிய  காலம் இது. 

வாக்கு வங்கி அரசியல் தான் அரசு ஊழியர்கள்  நினைத்ததைச் சாதிக்க காரணம்.  மக்களாகிய நாம்  அரசு ஊழியர்களுக்கு எதிராக வாக்களிப்போம். அரசு ஊழியர்கள் திமுகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்களிக்கட்டும் . நாம் மாற்று அரசியலை முன்வைக்கும் நல்ல மனிதருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய தயார் ஆவோம். 

திமுகவும் , அரசு ஊழியர்களும் இந்த நாட்டின் சாபம்.

-மாரிதாஸ்