குழந்தைகளை குறிவைத்த பாலியல் பாதிரி - பாய்ந்தது போக்ஸோ சட்டம்

குழந்தைகளை குறிவைத்த பாலியல் பாதிரி - பாய்ந்தது போக்ஸோ சட்டம்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் 70 வயது பாதிரியார் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

எர்ணாகுளம் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த மாதம் தன்னிடம் ஆசி பெற வந்த 9 வயதுடைய மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் ஜார்ஜ் படயாட்டி மீது வடக்கேகரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஜார்ஜ் படயாட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.