குவாலியரில் நடந்த ஆர்.எஸ். எஸ்....ன் அகில பாரத பொதுக்குழவின் அம்சங்கள்

குவாலியரில் நடந்த ஆர்.எஸ். எஸ்....ன் அகில பாரத பொதுக்குழவின் அம்சங்கள்

* எழுத்தார்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்துத்துவத்தின் பன்முக தன்மை பற்றி எடுத்து சொல்லப்பட்டது. அதில் 225 பேர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

* நாரதர் ஜெயந்தி சென்னை உட்பட நாடு முழுவதும் நடந்த நிகழ்ச்சிகள் மூலம் 6465 பத்திரிகையாளர்கள் வந்தனர். 945 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

*  கிராம முன்னேற்றத்திற்காக மகாராட்டிர மாநிலத்தில் மட்டும் 712 பேர் பயிற்சி பெற்றனர். 100 பேர் தனது ஒருவருட வாழ்க்கையை தர முன் வந்துள்ளனர்.  கர்நாடகாவில் இதே விஷயத்திற்காக 24 பெண்கள் முழு நேரத்தை தந்துள்ளனர்.

* பசு பாதுகாப்பில் 3224 கோசாலைகள் செயல்படுகிறது. 17,000த்திற்கும் மேற்பட்டோர் பசு மையமாக விவசாயம் செய்கின்றனர். 468 இடங்களில் பசு சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 6,538 இடங்களில் நடந்தது. அதில் 1.70  இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். 

*  புதிய news app அகில பாரத அளவில்....ritam,  தமிழகத்தில்....newstn.

* பொதுக்குழுவில் நாற்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.இந்து முன்னணி திருப்பூர்.. பொங்கலூரில் நடந்த 1 இலட்சம் குடும்பங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி சொல்லப்பட்டது.

* உலகெங்கும் இந்து ஒற்றுமை பணிகள் 43 நாடுகளில் 1,236 இடங்களில் அமைப்பு உள்ளது. சிகாகோவில் செப்டம்பர் 7,8,9 உலகளாவிய இந்து மாநாடு நடந்தது.  அதில் 60 நாடுகளில் இருந்து 2,500 பேர் கலந்து கொண்டனர்.