கூட்டணியில் இடம் உண்டா? வைகோ, திருமா ... திக் திக்

கூட்டணியில் இடம் உண்டா? வைகோ, திருமா ... திக் திக்

அதிமுக - பாஜக - பாமக கூட்டணி இறுதியாகிவிட்டது. தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று (20.02.19) வெளியாகும் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியானாலும், இன்று பிரதமை என்பதால் எந்த அறிவிப்பும் வராது என்றே தெரிகிறது. வைகோ 4 கேட்கிறார், நீங்கள் போட்டியிடுவதாக இருந்தால் 1 தருகிறோம், பம்பரம் சின்னத்தில் நில்லுங்கள். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் 2 தருகிறோம் என்று திமுக சொல்லியுள்ளது. திருமாவுக்கும் அதே நிலை. அவர் 3 கேட்க, ஒன்றே ஒன்று தருகிறோம், உதய சூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தனி சின்னத்தில் நிற்பேன் என்று அவர் கூறியுள்ள நிலையில், இழுபறி உள்ளது இந்நிலையில் திமுக வேறு ஒரு கணக்கை முன் வைத்துள்ளது. அதன்படி காங்கிரஸ் + தமிழ் மாநில காங்கிரஸ் 12, பழைய மக்கள் நல கூட்டணி 6, திமுக 22. அதாவது இரு கம்யூனிஸ்ட், வைகோ, திருமா சேர்த்து 6 இடங்கள், அவர்கள் பிரித்துக்கொள்ள வேண்டும். அதே போல 12 இடங்களை காங்கிரஸ் மற்றும் வாசன் பிரித்துக்கொள்ள வேண்டும். தனது 22 இடங்களில் இருந்து ஒன்றில் முஸ்லீம் லீக் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சரி என்று சொல்லிவிட்டாலும், வைகோ, திருமா முரண்டு பிடிப்பதாக தெரிகிறது. இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க, திமுக உள்ளேயே எதிர்ப்பு உள்ளதாம், எனவே இவர்கள் போனாலும் பரவாயில்லை என்று திமுக கருதுவதாகவும், அவ்வாறு நடந்தால் மீதமாகும் இடங்களில் திமுகவே போட்டியிடும் என தெரிகிறது. கடைசி நேரத்தில் ஏதேனும் சிறு கட்சி வந்தால், அவர்களுக்கு 1 கொடுக்கலாம் என்பது திமுக வின் எண்ணமாக உள்ளது. சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்டோரை கணிசமாக கவனித்து ஆதரவு மட்டும் தரும் கட்சிகளாக வைத்துக்கொள்ளவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.